ஆராய்ச்சி மாணவி தற்கொலை...டெல்லி ஐ.ஐ.டி.யில் அதிர்ச்சி சம்பவம்
ஐ.ஐ.டி. என்றாலே தற்கொலை சம்பவங்கள் அதிகம் நடக்கும் கல்வி நிறுவனம் என்ற நிலை இருப்பதை மேலும் ஒரு மாணவியின் தற்கொலை சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது.
டெல்லி: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா தேவக். 29 வயதான இவர் டெல்லி ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் பிஎச்.டி. இறுதியாண்டு படித்து வந்தார். ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அவர், நேற்று இரவு திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மஞ்சுளா தேவக் அறைக்கு மற்றொரு மாணவி சென்றபோது, விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் அவர் பிணமாகத் தொங்கியது கண்டு அதிர்ச்சியடைந்த அவர் மற்றவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி காவல் நிலையத்திற்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து போலீசார் வந்து மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணையம் நடத்தி வருகின்றனர்.
இறந்துபோன மாணவியின் அறையில் தற்கொலைக் குறிப்பு எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. எனினும்,படிப்பு தொடர்பான மன அழுத்தமே அவரை தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் என்று வழக்கம்போல் ஒரு தகவல் கூறப்படுகிறது.
மாணவி மஞ்சுளா தேவக் திருமணமானவர். அவரின் மரணம் குறித்து போபாலில் உள்ள அவரின் கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications