டெல்லி மெட்ரோ: ரயில் கதவை திறந்து வைத்து இயக்கிய ஓட்டுநர் இடைநீக்கம்!
டெல்லி: தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்ட மெட்ரோ ரயிலில் ஓடும்போது கதவுகள் திறந்து இருந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டெல்லியில் இருந்து காலையில் புறப்பட்ட மெட்ரோ ரயிலில் அடுத்த நிறுத்தம் வரையில் கதவுகள் திறந்த நிலையிலேயே இருந்தன.
எப்போதும் வினாடிக்குள் திறந்து மூடிக்கொள்ள வேண்டிய கதவுகள் கிட்டதட்ட 25 நிமிடங்களுக்கு திறந்தவண்ணம் இருந்துள்ளன. காலை 9.30 மணியளவில் அர்ஜன்கார்க் முதல் கிதோர்னி ஸ்டேஷன் வரையில் பயணிக்கும் அந்த மெட்ரோ ரயிலின் கதவுகள் திறந்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் ஜஹான்கீர்புரியில் ரயில் நின்று கிளம்பியபொழுது நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி டெல்லி மெட்ரோ ரயில் ஆய்வாளர்கள் தெரிவித்த போது, "ரயிலை இயக்கியவரால்தான் இந்த தவறு நிகழ்ந்துள்ளது. உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்று கூறியுள்ளனர்.
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீபோல் பரவியுள்ளது. டுவிட்டரில் இதுபற்றி, "டெல்லி மெட்ரோ, மும்பை லோக்கல் ரயில் போல மாற விரும்புகின்றது" என்று கூறியுள்ளனர்.
மற்றொருவரோ, "ஆப்பிள் கம்பெனி விரைவில் "ஸ்லைடு டு லாக்" வசதியை மெட்ரோ ரயில் கதவுகளுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்" என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த ரயிலில் ஒரு நாளைக்கு 23 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications