தற்கொலை செய்த மாடல் அழகியின் கொடூர போட்டோக்களை வெளியிட்ட சகோதரி
டெல்லி: டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட மாடல் பிரியங்கா கபூரை அவரது கணவர் நிதின் தாக்கியதால் காயமடைந்தபோது எடுத்த புகைப்படத்தை அவரது சகோதரி வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் மாடல் அழகி பிரியங்கா கபூர் தனது கணவர் நிதின் சாவ்லாவின் கொடுமையை தாங்க முடியவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதினை கைது செய்தனர்.

விசாரணையில் நிதின் கூறுகையில்,
பிரியங்கா இரவு நேரத்தில் வீட்டில் தங்காமல் பார், பப்புகள் என்று சுற்றுவார். குடிப்பழக்கம், போதைப் பொருள் பழக்கம் உள்ளவர். எனக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் படாடோபமாக வாழ முடியாது என நினைத்து என்னை விட்டு சென்றுவிடுவாரோ என அஞ்சினேன் என்றார்.
இந்நிலையில் பிரியங்காவின் சகோதரி டிம்பி கபூர் நிதின் கையால் அடிவாங்கிய காயத்துடன் இருக்கும் பிரியங்காவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
பிரியங்கா தனது நண்பருடன் டீ குடிக்க வெளியே சென்றதற்காக நிதின் அவரை காலை 4 மணிக்கு எழுப்பி அடித்துள்ளார். முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார், அறைந்துள்ளார், எட்டி உதைத்துள்ளார். கழுத்தை பிடித்து அவரது தலையை சுவரில் மோதியுள்ளார். இது குறித்து பிரியங்கா எங்களுக்கு தகவல் கொடுத்ததும் அவரை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தோம்.
சில நாட்களில் பிரியங்கா சமாதானமாகி கணவர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பிரியங்காவை அவரது மாமியாரும் தாக்கியுள்ளார். நிதினுக்கு பயந்து பிரியங்கா தனக்கு நேர்ந்த கொடுமையை எல்லாம் எங்களுக்கு தெரிவிக்காமல் பின்னர் மறைத்துவிட்டார் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications