திருமணத்தை தட்டிக் கழித்த டெல்லி இளைஞர்... "உறவுக்கு" அழைத்து ஒரே "வெட்டு".. பெண் கைது!

திருமணத்தை தட்டிக்கழித்தால் கட்டாய உடலுறவுக்கு அழைத்த பெண், இளைஞரின் ஆணுறுப்பை வெட்டிய சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி : கடந்த 4 ஆண்டுகளாக காதலித்த போதும் திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் தனது காதலனை உடலுறவுக்கு அழைத்து ஆணுறுப்பை வெட்டியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியின் மங்கோல்புரியை சேர்ந்த இளம்பெண்ணும் ரோட்டுக் கடை நடத்தி வரும் ரவி என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். கடந்த புதன்கிழமையன்று ரவி தனது காதலியை அவரது வீட்டில் சந்தித்துள்ளார்.

அப்போது அந்தப் பெண் திருமண பேச்சை எடுத்துள்ளார். அதற்கு தன்னுடைய வீட்டார் திருமணத்திற்கு ஒப்பு கொள்ளவில்லை என்று ரவி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் அவர்கள் சம்மதம் வேண்டாம் நாம் தானே காதலித்தோம், நாமே திருமணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

ஆவேசம்

ஆவேசம்

ரவி இதற்கு மறுப்பு தெரிவிக்கவே, அவரை தனது வீட்டில் உள்ள குளியலறைக்குள் தள்ளி ஆடைகளைக் கலைந்து உடலுறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு ரவி ஒப்பு கொள்ளாததால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண் ரவியின் ஆணுறுப்பை வெட்டியுள்ளதாக புகார் பதிவு செய்யப்பட்டது.

 மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

இந்த சம்பவத்தையடுத்து அலறித் துடித்துக் கொண்டு ஓடியுள்ளார், இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட இளைஞன் ரவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

 தலைமறைவு

தலைமறைவு

நடந்த சம்பவங்கள் குறித்து ரவி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த நிகழ்வின் போது பெண்ணிண் சகோதரனும், அவருடைய மனைவியும் வீட்டில் இருந்த போதும் அவர்கள் தடுக்கவில்லை என்றும் புகாரில் கூறப்பட்டிருந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த களேபரங்களால் இளம்பெண் மற்றும், அவரது குடும்பத்தார் தலைமறைவாகினர்.

கைது

கைது

நேற்று அந்தப் பெண்ணின் சகோதரனும், அவரது மனைவியும் பிடித்து விசாரிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை இளைஞரை தாக்கிய இளம்பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+