இரட்டை இலைச்சின்னம் பெற லஞ்சம்.. தினகரனுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
இரட்டை இலைச்சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் டிடிவி தினகரனுக்கு எதிராக டெல்லி போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
டெல்லி: இரட்டை இலைச்சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் டிடிவி தினகரனுக்கு எதிராக டெல்லி போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
ஆர் நகர் இடைத்தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க, டெல்லியை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் தினகரன் தரப்பு ரூ.10 கோடி பேரம் பேசியதாகவும், ரூ.1.5 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது
இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தனர். மேலும், டிடிவி தினகரன் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பின் சென்னை வந்து தினகரனிடம் விசாரணை நடத்தினர்.

திஹார் சென்ற தினகரன்
கடந்த ஏப்ரல் 26ம் தேதி தினகரனை கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். 42 நாட்கள் சிறைவாசத்திற்கு பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

தினகரன் பெயர் இல்லை
இந்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் சுகேஷ் சந்திரசேகரின் பெயர் மட்டும் இடம்பெற்றிருந்தது. தினகரன் பெயர் இடம்பெறவில்லை.

விடுவிக்கப்படுவார் - தகவல்
போதிய ஆதாரம் இல்லை என்பதால், குற்றப்பத்திரிக்கையில் தினகரனின் பெயரை டெல்லி போலீசார் சேர்க்கவில்லை என்றும் கூறப்பட்டது. எனவே, இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படுவார் எனவும் செய்திகள் பரவியது.

தினகரன் மீது குற்றப்பத்திரிக்கை
இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தினகரன் மீது டெல்லி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். டெல்லி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு போலீசார் கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

ஊழல் தடுப்புச்சட்டம்
இதில் தினகரனின் நண்பர்களான மல்லிகார்ஜூனா, இடைத்தரகர்கள் புல்கித் குந்த்ரா, ஜெய் விக்ரம் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக ஊழல் தடுப்புச்சட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பிறந்த நாளுக்கு முன்னதாக
டிடிவி தினகரனுக்கு இன்று பிறந்தநாள். பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாக அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications