Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூர் மருத்துவ மாணவர் சரத் பிரபு தலையில் ரத்த காயம்... கொலையா என டெல்லி போலீஸ் சந்தேகம்

திருப்பூர் மருத்துவ மாணவர் சரத் பிரபு தலையில் ரகத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அது தற்கொலை இல்லை கொலையாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டெல்லியில் தொடரும் தமிழக மருத்துவ மாணவர்களின் உயிரிழப்புகள்

    டெல்லி: டெல்லி யூசிஎம்எஸ் மருத்துவமனையில் மர்மமான முறையில் இறந்த கிடந்த முதுகலை மாணவர் சரத்பிரபு தலையில் ரத்தக் காயம் இருந்ததால் அது கொலையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் போலீஸார் உள்ளனர்.

    திருப்பூர் பாறைப்பாளையத்தைச் சேர்ந்தவர் சரத்பிரபு. திருச்செங்கோட்டில் உள்ள பள்ளியில் படித்த இவர் பிளஸ் 2 தேர்வில் 1187 மதிப்பெண்கள் பெற்றார்.

    பின்னர் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயின்றார். இந்நிலையில் முதுகலை படிப்பிற்காக கடந்த ஜூன் மாதம் டெல்லியில் உள்ள யூசிஎம்எஸ் கல்லூரியில் படித்து வந்தார்.

    அறையில் சடலமாக இருந்த சரத்பிரபு

    அறையில் சடலமாக இருந்த சரத்பிரபு

    இந்நிலையில் நேற்றைய தினம் திருப்பூரில் உள்ள உறவினர்களுடன் சரத் பிரபு சிரித்து பேசியுள்ளார். இதையடுத்து சரத் பிரபு பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டதாக தந்தை செல்வமணிக்கு நேற்று இரவு போன் வந்தது.

    பலியான சரத்பிரபு

    பலியான சரத்பிரபு

    டெல்லியில் உள்ள மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த சரத் பிரபு இன்று காலை இறந்து விட்டதாக வந்த தகவலை கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஜிடி கார்டன் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இன்சுலின் மருந்து

    இன்சுலின் மருந்து

    சரத்பிரபுவின் உடல் அருகே சிரிஞ்சிகள், இன்சுலின் பாட்டில், பொட்டாசியம் குளோரைடு ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர். இந்நிலையில் அவரது தலையில் ரத்த காயத்தை போலீஸார் கவனித்தனர். இதனால் அவர் தற்கொலை செய்திருக்கமாட்டார் என்றும் இவரது சாவில் மர்மம் இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

    இரு மாணவர்களிடம் விசாரணை

    இரு மாணவர்களிடம் விசாரணை

    கல்லூரிக்கு அருகே உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் சரத்பிரபு, அரவிந்த், கார்த்திகேயன் உள்பட தமிழகத்தை சேர்ந்த 4 பேர் தங்கியிருந்தனர். ஒரு மாணவர் பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு சென்றுவிட்டார். இன்று காலை சரத் பிரபு தங்கியிருந்த அறை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அரவிந்த் போலீஸுக்கு தகவல் அளித்தார். அதையடுத்து அவரை மீட்ட போலீஸார் மருத்துவமனையில் சேர்க்கும் போதே அவருக்கு உயிர் இல்லை என்று கூறப்படுகிறது.

    முன்னுக்கு முரணாக தகவல்

    முன்னுக்கு முரணாக தகவல்

    இந்நிலையில் சென்னையை சேர்ந்த கார்த்திகேயன், அரவிந்த் ஆகியோரை தனி அறையில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கார்த்திகேயன் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்துள்ளதாக தெரிகிறது. சரத்பிரபுவின் உடலை பிரேத பரிசோதனை செய்தால் மட்டுமே உண்மை தெரிய வரும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+