டெல்லி பூங்காவில் பயங்கரம்... கள்ளக்காதலியைச் சுட்டுக் கொன்று தற்கொலைக்கு முயன்ற எஸ்.ஐ
டெல்லி: டெல்லியில் பூங்கா ஒன்றில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ஒருவர் 28 வயது பெண்ணை சுட்டுக் கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள துவார்கா பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சப்இன்ஸ்பெக்டரும், அப்பெண்ணும் முதலில் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது கோபத்தில் அவர் துப்பாக்கியால் அப்பெண்ணை மூன்று முறை சுட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்பெண்ணைச் சுட்டவுடன், தன்னையும் அவர் இரண்டு முறை சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவர்களைச் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அப்பெண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக்டர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசாரின் விசாரணையில் ஏற்கனவே அந்த சப் இன்ஸ்பெக்டர் மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.
அதோடு தற்போது சுட்டுக் கொல்லப்பட்ட அப்பெண்ணிற்கும், சம்பந்தப்பட்ட சப் இன்ஸ்பெக்டருக்கும் தகாத உறவு இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. கடந்த 3 வருடமாக இந்தப் பெண்ணுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications