டெல்லி தேர்தல் பிரச்சாரத்திற்கு ரூ.200 கோடி செலவு: அசோசாம்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசியல் கட்சிகள் ரூ.200 கோடி செலவு செய்துள்ளதாக அசோசாம் தெரிவித்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே தான் போட்டி. காங்கிரஸுக்கு ஒன்று இரண்டு இடங்கள் தான் கிடைக்கும் என்று அனைத்து தேர்தல் கருத்துக்கணிப்புகளும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக கட்சிகள் செய்த செலவு குறித்து அசோசாம் (ASSOCHAM) அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

ரூ.200 கோடி
டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்காக மட்டும் அரசியல் கட்சிகள் சுமார் ரூ.200 கோடி செலவு செய்துள்ளன. செய்தித்தாள்கள் மற்றும் டிவிக்களில் விளம்பரம் செய்யத் தான் பெரும் தொகை செலவாகியுள்ளது.

செலவு
கடந்த 2013ம் ஆண்டு நடந்த டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி செய்யப்பட்ட பிரச்சாரத்திற்கான செலவை விட தற்போது 30 முதல் 40 சதவீதம் கூடுதல் செலவு செய்யப்பட்டுள்ளது.

கட்சிகள்
வேட்பாளர்கள் இவ்வளவு தான் செலவு செய்ய வேண்டும் என்று உள்ளது. ஆனால் கட்சிகளுக்கு அந்த கட்டுப்பாடு இல்லாதது தேர்தல் சட்டத்தில் உள்ள ஓட்டையாகும். அதை முதலில் சரி செய்ய வேண்டும் என்று அசோசாம் பொதுச் செயலாளர் டி.எஸ். ராவத் தெரிவித்துள்ளார்.

மீடியாக்கள்
டெல்லி தேர்தலால் மீடியாக்களுக்கு தான் நல்ல லாபம். விளம்பரங்களால் வருமானம் வந்துள்ளது. தொலைக்காட்சி சேனல்களின் டிஆர்பி அதிகரித்துள்ளது என்றார் ராவத்.

கிரிமினல்கள்
டெல்லி சட்டசபை தேர்தலில் 673 பேர் போட்டியிட்டுள்ளனர். அதில் 114 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications