மே.வங்கத்தில் மமதா அரசால் சீரழிக்கப்பட்ட ஜனநாயக அமைப்புகளை சீரமைப்போம்: பிரதமர் மோடி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சீரழிக்கப்பட்டுவிட்ட ஜனநாயக அமைப்புகளை சீரமைப்போம் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. மேற்கு வங்கத்திலும் சட்டசபை தேர்தல் களைகட்டி இருக்கிறது.
கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த கூட்டத்தில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பாஜகவில் இணைந்தார்.

மோடியின் ஜெய்ஶ்ரீராம் முழக்கம்
இக்கூட்டத்தில் ஜெய்ஶ்ரீராம் முழக்கங்களை எழுப்பி பிரதமர் மோடி பேசியதாவது: இப்பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் வரலாற்றின் பல அத்தியாயங்களை உருவாக்கி இருக்கிறது. மேற்கு வங்கம் அமைதியை விரும்புகிறது.

மக்கள் விருப்பம்
மேற்கு வங்க மக்கள் தங்கமயமாக வங்கத்தை விரும்புகின்றனர். இந்த மாநில மக்கள் ஒரு பக்கம் நிற்கின்றனர். இன்னொரு பக்கம் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரிகள் நிற்கின்றனர். இந்த சட்டசபை தேர்தலானது அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சிக்கானது.

ஜனநாயக அமைப்புகள் சீரழிவு
நமது நாடு 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது நாட்டின் வளர்ச்சியில் மேற்கு வங்க மாநிலமும் மிக முக்கியமான பங்களிப்பை செய்யும். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் ஜனநாயக அமைப்புகளை சீரழித்துவிட்டது. இதை சீரமைக்க வேண்டிய பொறுப்பு பாஜகவுக்கு இருக்கிறது.
|
அரசியல் வன்முறை
உங்களது நம்பிக்கைகளை நிறைவேற்றத்தான் இங்கு வந்திருக்கிறோம். உங்களது கனவுகளை நிறைவேற்றுவதற்காக நாங்கள் பாடுபடுகிறோம். மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறைகள் தொடரவே செய்கின்றன. பாஜக ஆட்சியில் இந்த அரசியல் வன்முறை கலாசாரத்துக்கு முடிவு கட்டுவோம். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.
-
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications