Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மபியில் காவல் நிலையம் மீது கல்வீச்சு.. முஸ்லிம் தலைவரின் ரூ.10 கோடி மதிப்புள்ள அரண்மனை வீடு இடிப்பு

Subscribe to Oneindia Tamil

போபால் : மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் நபிகள் நாயகம் குறித்து இழிவுபடுத்தி பேசியதாக சாமியார் ராம்கிரி மஹாராஜ்க்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது காவல் நிலையத்தை தாக்கி சூறையாடியதாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து உள்ளூர் முஸ்லிம் தலைவரின் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை அதிகாரிகள் இடித்து தரைமட்டம் ஆக்கினர். கார்களையும் புல்டோசரால் நசுக்கினார்கள்.

நபிகள் நாயகம் குறித்து இழிவுபடுத்தி பேசியதாக, மகாராஷ்டிரா சாமியார் ராம்கிரி மஹாராஜ்க்கு எதிராக மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி நகரில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி போராட்டம் நடந்தது. அப்போது சுமார் 100 முதல் 150 முஸ்லிம் சமூகத்தினர் பேரணி வந்துள்ளார்கள். அங்குள்ள கோட்வாலி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. போலீஸ் நிலையத்தில் இருந்த காவலர்கள் உள்பட பலர் கல்வீச்சு மற்றும் தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்தனர்.

Madhya Pradesh house muslim

இதுபற்றி சத்தர்பூர் மாவட்ட காவல்துறையினர் கூறுகையில், கோட்வாலி நகர் காவல்நிலையத்திற்கு ஆகஸ்ட் 21 ஆம் தேதி மதியம் 2.45 மணியளவில், உள்ளூர் முஸ்லிம் தலைவர்கள் ஜாவேத் அலி மற்றும் ஷாஜத் அலி தலைமையில் சுமார் 100-150 முஸ்லிம் சமூகத்தினர் வந்தனர். மகாராஷ்டிராவின் மஹந்த் ராம்கிரி மஹராஜ், நபிகள் பற்றி கூறியதாகக் கூறப்படும் கருத்துக்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியபடி வந்தனர்.

அங்கு திடீரென கூட்டத்தில் இருந்த சிலர் காவல்துறையினர் மீது கற்களை வீசினார்கள். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பலர் சிறுவர்கள் ஆவர். அவர்கள் கம்பு, கற்கள், இரும்பு கம்பிகள் மற்றும் வாள்களுடன் காவல் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் போலீஸ் ஸ்டேசனில் இருந்த இன்ஸ்பெக்டர் அரவிந்த் குஜூர் மற்றும் ஸ்டேஷனில் இருந்த மற்ற அதிகாரிகள் மீது திட்டமிட்டு கடுமையாக தாக்குதலை நடத்தினர்.

காவல் நிலைய வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் அவர்கள் அடித்து உடைத்து சேதப்படுத்தினார்கள். நிலைமை மோசமானதை அடுத்து கண்ணீர் புகை குண்டு வீசிய கூட்டத்தை கலைந்து போக செய்தோம். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 20 பேரை கைது செய்துள்ளோம். மேலும் பலரை கைது செய்துள்ளோம். இன்று மாலைக்குள் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை உயரும். அடையாளம் தெரிந்த 46 பேர் உள்பட மொத்தம் 150க்கும் மேற்பட்டோர் மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பின்னால் உள்ள உண்மையான நோக்கம் குறித்து விசாரித்து வருகிறோம்.

இந்த வன்முறை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், "எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாதபடி கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு" காவல்துறை இயக்குநர் ஜெனரல் சுதிர் சக்சேனாவுக்கு உத்தரவிட்டார். இது தொடர்பாக ட்விட்டர் தளத்தில் கருத்து பதிவிட்ட மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், "மத்திய பிரதேசம் அமைதியான மாநிலம், திட்டமிட்டு சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்படும் எவரையும் இந்த மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்... மாநிலத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதே எங்கள் முன்னுரிமை" என்று கூறினார்.

இதனிடையே நேற்று காலை, அண்டை மாவட்டங்களில் இருந்து கூடுதல் படைகள் மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள், காவல்நிலைய வன்முறை சம்பவத்திற்கு காரணமானவர் என்று கருதப்படும் ஷாஜாத் அலியின் வீட்டின் முன்பு குவிந்தனர். அந்த வீடு சட்டவிரோதமாக ஒரு ஏக்கர் பரப்பளவில் அரசின் எந்த அனுமதியுமின்றி கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரது வீட்டின் பூட்டை உடைத்த போலீசார், அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து தரைமட்டம் ஆக்கினார்கள். அரண்மனை வடிவில் கட்டப்பட்ட அந்த மொத்த வீட்டையும் இடிப்பதற்கு முன்பு அதிகாரிகள் முறைப்படி நோட்டீஸ் வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே ஆளும் பாஜக அரசு குறிப்பிட்ட முஸ்லிம் தலைவரான ஜாவேத் அலி காங்கிரஸின் மாவட்ட சிறுபான்மை பிரிவின் உறுப்பினர் என்று குற்றம் சாட்டியது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ திட்டவட்டமாக மறுத்ததுடன், ஷாஜாத்தின் சகோதரர் பாஜகவைச் சேர்ந்தவர் என்று குற்றம்சாட்டியது. ஆனால் இதை பாஜகவும் மறுத்துள்ளது. இரு கட்சிகளும் மாறி மாறி மறுத்த நிலையில், ஷாஜாத் அலி வீடு தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாஜக ஆட்சி நடந்து வரும் மத்திய பிரதேசத்தில் இதற்கு முன்பும் வீடுகள ஜேசிபி வைத்து இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+