டெபிட், கிரெடிட் கார்ட்டுகளைத்தான் இனி பயன்படுத்தனுமாம்.. வங்கிகளுக்கு அருண் ஜெட்லி உத்தரவு
டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் போன்ற மின்னணு பணப்பரிமாற்றத்தை அதிகரிக்க வங்கிகளுக்கு உத்தரவுவிட்டுள்ளதாக அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
டெல்லி: மின்னணு கார்டுகளான டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்டுகள் மூலம் பணப்பரிமாற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கையாக கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து வங்கிகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அறிவிப்புகளை மத்திய அரசு அறிவித்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், இன்று மாலை டெல்லியில் பல்வேறு வங்கி தலைவர்களுடன் அருண் ஜெட்லி வீடியோ கான்பரன்ஸ் மூலம் வங்கி தலைவர்களுடன் ஜேட்லி ஆலோசனை நடத்தினார். அப்போது, ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பாக பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாடிக்கையாளர்களுக்கு மாற்றிக் கொடுப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் போன்ற மின்னணு அட்டைகளின் மூலம் பணப்பரிமாற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மின்னணு பணம் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஈ-வேலட் மற்றும் டெபிட் கார்ட்டு பயன்பாடு இந்தியாவில் அதிகரித்துள்ளது. இந்தியாவில் 80 கோடிப் பேர் டெபிட், கிரெடிட், ரூபே கார்டுகளை வைத்துள்ளனர். இதில் 40 கோடி பேர் தேவைக்கேற்ப டெபிட் கார்டை பயன்படுத்தி வருகின்றனர். மின்னணு பணப்பரிமாற்றத்தின் மூலம் வணிகத்தை அதிகரிக்க முடியும் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications