ரூ.500, 1000 நோட்டுகளுக்குத் தடை.. ராஜ்யசபாவில் கடும் அமளி.. நாள் முழுவதும் அவை ஒத்தி வைப்பு
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கண்டித்து எதிர்க்கட்சியினர் ராஜ்யசபாவில் இன்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.
டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. நேற்றே ராஜ்யசபாவில் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து பேசியது. இதனைத் தொடர்ந்து இன்றும் ராஜ்யா சபாவில் கேள்விகளை எழுப்பி கடும் அமளியில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் ராஜ்யசபா நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 8ம் தேதி இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அன்றாட செலவிற்கும் பணம் இல்லாமல் சொந்தப் பணத்தை எடுப்பதற்கும் நாள் முழுக்க வெயிலில் காத்துக் கிடக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்தன.

இந்நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. ராஜ்யசபாவில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து 2வது நாளாக இன்று காலை 10 மணிக்கு ராஜ்யசபா தொடங்கியது. சபை தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் ரூபாய் நோட்டு செல்லாது என்ற விவகாரம் தொடர்பாக கேள்விகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
சபா நாயகர் இருக்கையில் அமருமாறு கேட்டுக் கொண்டும் எம்பிகள் அமராமல் தொடர்ந்து அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனையடுத்து 11. 30 வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், மீண்டும் அவை தொடங்கிய போது, எதிர்க்கட்சி எம்பிகள் கடும் அமளியில் மீண்டும் ஈடுபட்டனர். இதனையடுத்து, 2வது முறையாக ராஜ்யசபா 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்டு தொடங்கும் போதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் தொடர்ந்து அவையை நடத்த முடியாத சூழல் உருவானது. இதனையடுத்து, ராஜ்யசபா நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications