பணத்தட்டுப்பாடு தெரிந்தும் ஏன் ரூ.100 நோட்டை அதிகம் அச்சடிக்கவில்லை.. திரிணாமுல் கேள்வி
100 ரூபாய் நோட்டுக்களை ஏன் அதிக அளவில் அச்சடிக்கவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ராஜ்ய சபாவில் கேள்வி எழுப்பினார்.
டெல்லி: பணத் தட்டுப்பாடு வரும் என்று தெரிந்தும் ஏன் 100 ரூபாய் நோட்டுக்களை அதிக அளவில் அச்சிடப்படவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரெய்ன் இன்று ராஜ்ய சபாவில் கேள்வி எழுப்பினார்.
கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. தொடக்க நாளில் இருந்தே ராஜ்ய சபாவில் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது தொடர்பாக அமளியில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வந்தனர். ராஜ்ய சபாவில் பிரதமர் மோடி நேரில் வந்து பதில் அளிக்க வேண்டும், இது குறித்து தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரியும் கடந்த 6 நாட்களாக ராஜ்ய சபா முடக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு ராஜ்ய சபா கூடியது. எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் 12 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் கூடிய போது பிரதமர் மோடி அவைக்கு வந்தார். இதனையடுத்து ராஜ்ய சபாவில் ரூபாய் நோட்டு செல்லாது என்ற விவகாரம் குறித்த விவாதத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி டெரிக் ஓ பிரெய்ன் பேசியதாவது:
ரூபாய் நோட்டு செல்லாது என்று மோடி அறிவித்துள்ளது இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரையும் பாதித்துள்ளது. ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிந்தும் ஏன் 100 ரூபாய் நோட்டை அதிக அளவில் அச்சடிக்கவில்லை. பழைய 500 ரூபாய் நோட்டு செல்லுப்படியாகும் என்று மீண்டும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் 92 சதவீத மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளதை கேட்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி திரும்பப் பெற வேண்டும் என்று டெரிக் ஓ பிரெய்ன் கேட்டுக் கொண்டார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications