For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆம்புலன்ஸ் தர மறுப்பு.. இறந்த தாயின் உடலை பைக்கில் எடுத்து சென்ற மகன்.. மத்திய பிரதேசத்தில் அவலம்

மத்திய பிரதேசத்தில் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர மறுத்ததால், இளைஞர் ஒருவர் இறந்த தாயின் உடலை பைக்கில் எடுத்து சென்று இறுதிச்சடங்கு செய்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    இறந்த தாயின் உடலை பைக்கில் எடுத்து சென்ற மகன்..வீடியோ

    போபால்: மத்திய பிரதேசத்தில் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர மறுத்ததால், இளைஞர் ஒருவர் இறந்த தாயின் உடலை பைக்கில் எடுத்து சென்று இறுதிச்சடங்கு செய்துள்ளார்.

    மத்திய பிரதேச மாநிலம் மஸ்தபுர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் குன்வர்பாய் பங்ஷகர். பாம்பு கடித்ததால் மோஹங்கர் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில்சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    Denied ambulance by the hospital, Man carried mothers body in his bike

    உயிரிழந்த அந்த பெண்ணுக்கு மருத்துவமனை ஆம்புலன்ஸ் தர மறுத்துள்ளது. மகனிடம் ஆம்புலன்சிற்கு பணம் இல்லாததால், ஆம்புலன்ஸ் தர மறுத்துள்ளனர். இதனால் அவர் பிரேத பரிசோதனைக்காக இறந்த தன் தாயின் உடலை தன்னுடைய இருசக்கர வாகனத்திலேயே எடுத்து சென்றுள்ளார்.

    எவ்வளவு எடுத்து கூறியும் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர மறுத்து விட்டதாக அவர்கள் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தனது இருசக்கர வாகனத்தில் தாயின் உடலை எடுத்து சென்றுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இந்த சம்பவத்தின் வீடியோ பதிவுகளும், புகைப்படமும் வைரல் ஆகி கொண்டு வருகிறது.இந்த சம்பவம் குறித்து குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

    சமீப காலங்களில் இது போன்ற அவலங்கள் வடமாநிலங்களில் அடிக்கடி நடப்பது வாடிக்கையாக உள்ளது. உதாரணமாக ஒடிசாவில் மருத்துவமனையில் அனுமதிக்காத தன் மனைவியை தன் தோளில் சுமந்து சுமார் 10 கிலோ மீட்டர் வரை சென்ற சம்பவம் மக்களிடம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    English summary
    Denied ambulance by the hospital, Man carried mother's body in his bike in Madhya Pradesh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X