யாரிடமும் சொல்லக்கூடாது.. மிரட்டி மிரட்டியே பெண் போலீஸ் மகளை 5 மாதமாக பலாத்காரம் செய்த துணை கமிஷனர்!
மகாராஷ்டிராவில் பெண் போலீஸ் ஒருவரின் மகளை துணை கமிஷனர் மிரட்டி மிரட்டி மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

அவுரங்காபாத்: மகாராஷ்டிராவில் பெண் போலீஸ் ஒருவரின் மகளை துணை கமிஷனரே மிரட்டி மிரட்டி 5 மாதங்களாக மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுமிகள், இளம் பெண்கள், மூதாட்டிகள் என்ற பாகுபாடின்றி பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகின்றன.
உலகில் பெண்களுக்கு சற்றும் பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது. இதனை மத்திய அரசு மறுத்துள்ளபோதும் காவல்துறையில் பணியாற்றுபவரின் குழந்தைகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

துணை கமிஷனர்
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் துணை கமிஷனராக பணியாற்றி வருபவர் ராகுல் ஸ்ரீராம். இவருக்கு பெண் போலீஸ் ஒருவர் பழக்கமானார்.

சகஜமாக பழகிய பெண்
இந்நிலையில் மகளின் வேலை தொடர்பாக ராகுல் ஸ்ரீராமிடம் பேசிய அந்த பெண் போலீஸ் தனது 23 வயது மகளை அவருக்கு அறிமுகம் செய்துள்ளார். அம்மாவுக்கு தெரிந்தவர்தானே என துணை கமிஷனருடன் சகஜமாக பழகியுள்ளார் அந்த 23 வயது இளம்பெண்.

வேலைக்கு உறுதி
பெண் போலீஸின் மகளை அடைய திட்டமிட்ட துணை கமிஷனர் உனக்கு வேலை வாங்கி தருகிறேன் என உறுதியளித்துள்ளார். இதனை நம்பி அந்த பெண்ணும் அவருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார்.

மிரட்டி பலாத்காரம்
தனது ஆசையை நிறைவேற்ற எண்ணிய துணை கமிஷனர் ராகுல் ஸ்ரீராம், கடந்த பிப்ரவரி மாதம் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தனது அம்மா உட்பட வேறு யாரிடமுடம் இதுகுறித்து மூச்சுவிடக்கூடாது என மிரட்டியுள்ளார்.

மிரட்டி மிரட்டியே..
இதனால் மிரண்டு போன அந்த பெண்ணும் யாரிடமும் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே நொந்துள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்ட ராகுல் ஸ்ரீராம் தேவைபடும் போதெல்லாம் அந்த பெண்ணை மிரட்டி மிரட்டியே தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கதறிய மகள்
கடந்த 21ஆம் தேதியும் துணை கமிஷனர் ராகுல் ஸ்ரீராம் தனது காம வேட்டையை அரங்கேற்றியுள்ளார்.ஒரு கட்டத்துக்கு மேல் இந்த வேதனையை தாங்க முடியாத மகள் இதுகுறித்து தனது தாயாரிடம் கூறி கதறியுள்ளார்.

துணை கமிஷனர் மீது வழக்குப்பதிவு
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் போலீஸ் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசாரும் துணை கமிஷனர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

லீவில் எஸ்கேப்
இதனையறிந்த ராகுல் ஸ்ரீராம் விடுப்பு எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் இந்த புகார் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications