நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சாமியார் ராம் ரஹிம் மீதான பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை!
டெல்லி: தேரா சச்சா அமைப்பு தலைவர் சாமியார் ராம் ரஹிம் மீதான பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை இதுதான்:
2002ம் ஆண்டு ஏப்ரலில், ஒரு அனாமதேய கடிதம் பஞ்சாப்-ஹரியானா ஹைகோர்ட்டுக்கு வந்தது. அதில் தன்னை ராம் ரஹிம் சிஷ்யை என கூறிக்கொண்ட ஒரு பெண், சாமியார் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.

2002 செப்டம்பர் 3ல், இந்த கடிதத்தை ஆதாரமாக கொண்டு, ஹைகோர்ட் தானாக முன்வந்து எடுத்தது. சிர்சா மாவட்ட நீதிமன்றம் இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டது.
2002 செப்டம்பரில், மாவட்ட நீதிமன்றம், பிறப்பித்த உத்தரவில், மத்திய புலனாய்வு அமைப்புதான் இதை விசாரிக்க வேண்டும் என கூறியது.
2002 செப்டம்பர் 24ல், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க ஹைகோர்ட் பரிந்துரைத்தது. 6 மாதங்களுக்குள் அறிக்கை வழங்க வலியுறுத்தியது.
2002 டிசம்பரில் சிபிஐயால் ராம் ரஹிம் சிங் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2007 ஜூலையில், சிபிஐ இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
2008 செப்டம்பர் 6ம் தேதி, சிபிஐ சிசறப்பு நீதிமன்றம், ராம் ரஹிம் மீது பலாத்காரம், குற்றச்செயல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
2011 ஏப்ரல் 5ம் தேதி, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அம்பாலாவிலிருந்து, பஞ்குலாவுக்கு மாற்றப்பட்டது.
2017 ஜூலை 11ல், விசாரணையை விரைந்து முடிக்குமாறு, சிபிஐ நீதிமன்றத்திற்கு, ஹைகோர்ட் உத்தரவிட்டது.
2017 ஆகஸ்ட் மாதம், வாதங்கள் நிறைவடைந்தது. ஆகஸ்ட் 25ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. நீதிபதி ஜக்தீப் சிங் இவ்வுத்தரவை பிறப்பித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications