பாகிஸ்தானுடன் பேச்சு ரத்தான நிலையிலும் பாக். தூதரை சந்திக்கும் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள்
டெல்லி: காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை மத்திய அரசு ரத்து செய்தது. இந்நிலையிலும் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் இன்று சந்தித்து பேச உள்ளனர்.
இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர்கள் இடையேயான சந்திப்பு வரும் 25ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடப்பதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தான் தூதரக அதிகாரி அப்துல் பாசித் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை இன்று டெல்லியில் சந்தித்து பேசுகிறார். இது குறித்து அறிந்த மத்திய அரசு இஸ்லாமாபாத்தில் நடப்பதாக இருந்த சந்திப்பு நிகழ்ச்சியை ரத்து செய்தது.
இருப்பினும் பிரிவினைவாத தலைவர்கள் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை திட்டமிட்டபடி இன்று டெல்லியில் சந்தித்து காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுகிறார்கள். இந்த சந்திப்பில் ஹுரியத் மாநாட்டு தலைவர் செய்யது அலி ஷா ஜீலானியும் கலந்து கொள்கிறார்.
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபிர் ஷா அப்துல் பாசித்தை டெல்லியில் வைத்து சந்தித்து பேசுகிறார். வெளியுறவுத் துறை செயலாளர்கள் இடையேயான சந்திப்பு நிகழ்ச்சியை இந்தியா ரத்து செய்துள்ளது வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
சந்திப்பு நிகழ்ச்சியை ரத்து செய்துள்ள மத்திய அரசின் முடிவு வினோதமானது என்று ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆளும் தேசிய மாநாட்டு கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து ஹுரியத் மாநாட்டு செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
மிர்வாய்ஸ் உமர் பாருக் பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரியை டெல்லியில் சந்தித்து பேசுகிறார். பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது துரதிர்ஷ்டவசமானது என்றார்.












Click it and Unblock the Notifications