22 வயதில் கவுன்சிலர், 27ல் மேயர், 44ல் மகாராஷ்டிரா முதல்வர் ஆன தேவேந்திர பட்னாவிஸ்
மும்பை: நாக்பூர் எம்.எல்.ஏ. தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிராவின் 27வது முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. பாஜக அரசு இன்று பதவியேற்றுக் கொண்டது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ்(44) முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய முதல்வர் பட்னாவிஸ் யார் என்று பார்ப்போம்

சட்ட பட்டதாரி
ஜன சங் உறுப்பினராக இருந்த கங்காதர்ராவ் பட்னாவிஸின் மகனான தேவேந்திர பட்னாவிஸ் சட்டம் பயின்றுவிட்டு, நாக்பூர் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முடித்தார். 1989ம் ஆண்டு பாஜகவின் மாணவர் அணியில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை துவங்கினார்.

கவுன்சிலர், மேயர்
22 வயதிலேயே தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் மாநகராட்சியின் கவுன்சிலர் ஆனார். பின்னர் 27 வயதில் 1997ம் ஆண்டில் அவர் நாக்பூரின் மேயர் ஆனார். இளம் வயதில் நாக்பூரின் மேயர் ஆனவர் தேவேந்திர பட்னாவிஸ்.

பிராமணர்
தேவேந்திர பட்னாவிஸ் ஒரு பிராமணர். மகாராஷ்டிராவில் இதுவரை ஒரேயொரு பிராமணர் தான் முதல்வராக இருந்துள்ளார். அவர் தான் மனோகர் ஜோஷி. அவரை அடுத்து தற்போது பட்னாவிஸ் இரண்டாவது பிரமாண முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்.
நேர்மையானவர் என்று பெயர் பெற்ற தேவேந்திர பட்னாவிஸ் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications