அமெரிக்காவில் இருந்து வெளியேறினார் துணைத் தூதர் தேவ்யானி!

Subscribe to Oneindia Tamil

Devyani leaves US, will be posted with MEA in Delhi
டெல்லி: அமெரிக்காவில் விசா மோசடியில் ஈடுப்பட்டதாக கூறி கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இந்திய துணைத் தூதர் தேவ்யானி இன்று அந்நாட்டிலிருந்து வெளியேறி இந்தியா புறப்பட்டுள்ளார்.

விசா முறைகேடு புகார் தொடர்பாக, அமெரிக்க நீதிமன்றத்தில் தேவ்யானி மீது நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அவர் மீது விசா முறைகேடு, தகவல்களை மறைத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் தேவ்யானிக்கு தூதரக ரீதியான சட்டப் பாதுகாப்பு வழங்கப்படுவதாக அமெரிக்க அரசு தலைமை வழக்கறிஞர் ப்ரீத் நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்திற்கு கடிதம் அளித்தார். இதனால் தேவ்யானி அமெரிக்காவில் இருந்து வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேவ்யானி மீதான வழக்கு அதே நிலையில் தொடரும் என்றும், அவர் தூதர் அந்தஸ்து இல்லாமல் அமெரிக்கா வரும்போது, விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாடு திரும்பும் முன் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த தேவ்யானி, தம் மீதான குற்றச்சாட்டு பொய்யானது, ஆதாரமற்றது என்று கூறினார். தாம் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிருபிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா திரும்பும் தேவ்யானிக்கு, டெல்லியில் வெளியுறவு அமைச்சகத்தில் பொறுப்பு வழங்கப்படக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+