பிரதமர் மோடி, ஜெட்லியுடன் தயாநிதி மாறன் சந்திப்பு- ராஜ்நாத் சிங் தவிர்ப்பு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோரை மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின் போது, சன் குழும நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு அனுமதி கிடைப்பதில் நீடித்து வரும் சிக்கல் குறித்து பிரதமருடன் அவர் பேசியதாக கூறப்படுகிறது. முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ, மத்திய அமலாக்கத்துறை ஆகியவை தொடர்ந்த வழக்குகளின் பின்னணியில் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.

நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை தயாநிதி மாறன் சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் இந்தச் சந்திப்பு நடந்தது. இதைத் தொடர்ந்து, இருவரும் பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர். சுமார் 10 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடந்தது. இதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்கத் தயாநிதி மாறன் முயன்றார். ஆனால், அதற்கான நேரம் கிடைக்கவில்லை' என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தனக்கு எதிராக நிலுவையில் உள்ள சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை வழக்குகள் குறித்தும், தனது சகோதரர் கலாநிதி மாறனின் தொலைக்காட்சி, பண்பலை வானொலிகளுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்க மத்திய உள்துறை மறுப்பது குறித்தும் நரேந்திர மோடி, அருண் ஜெட்லியுடன் தயாநிதி மாறன் பேசியதாகத் தெரிகிறது.
பிரதமர், நிதியமைச்சர் ஆகிய இருவரையும் திடீரென சந்தித்த தயாநிதி மாறன் பெரும் முயற்சி எடுத்தும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்க முடியாமல் போனது.
கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோருக்கு எதிரான வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சன் டிவி குழும நிறுவனங்களின் விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறையிடம் மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை வலியுறுத்தி வருகிறது. ஆனால், "வெளிநாடுகளில் இருந்து தவறான வழிகளில் செய்யப்படும் முதலீடுகள் பொருளாதாரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்' என்று கூறி, அந்தக் கோரிக்கையை மத்திய உள்துறை ஏற்கெனவே இரு முறை நிராகரித்து விட்டது.
இந்தப் பிரச்னையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால்தான், தயாநிதி மாறனைச் சந்திக்காமல் ராஜ்நாத் சிங் தவிர்த்ததாகக் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications