"நெல்லு வேற மழையில் நனையுது.. மோடி சொன்ன போட்டோ எங்கே.. ஸ்டாலினை பாத்தீங்களா".. எகிறிய அர்ஜுன் சம்பத்

கருணாநிதிக்கு பேனா சிலை வைப்பதற்கு அர்ஜுன் சம்பத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: தங்களது முகப்பு படமாக தேசியக் கொடியை வைக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டுள்ள நிலையில், கருணாநிதி தேசியக் கொடியேற்றிய முகப்பு படத்தை தமிழக முதல்வர் வைத்துள்ளாரே.. இதில்கூட அரசியலா? என்று இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பி உள்ளார்.

தொடர்ந்து திமுகவை சீண்டியும் விமர்சித்தும் வருகிறார் அர்ஜுன் சம்பத்.. சில நாட்களுக்கு முன்பு அவர் பேட்டி தந்திருந்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசும்போது, ஈ.வே.ராமசாமி திராவிட இயக்கத்தினால்தான், காமராஜர் முதல்வர் ஆனார் என்று அவரின் வரலாற்றை திரித்து சொல்வதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும்.

வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு என்று ஏகப்பட்ட பிரச்சினைகள் இங்கே இருக்கும்போது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சமாதி அருகே பேனா நினைவு சின்னம் அமைப்பது தேவையற்றது... அப்படி மட்டும் திமுக அமைக்க முயன்றால், இந்து மக்கள் கட்சி சும்மா இருக்காது.. நிச்சயம் போராட்டத்தில் ஈடுபடும்" என்று எச்சரிக்கை விடுத்திருந்தார் அர்ஜூன் சம்பத்.

சீர்காழி

சீர்காழி

இப்போது மீண்டும், கருணாநிதி சிலை குறித்து கேள்வி எழுப்பி உள்ளதுடன், திமுக அரசையும் விமர்சித்துள்ளார். 75வது சுதந்திர தின விழா ஆண்டை முன்னிட்டு, இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்படும், வந்தே மாதரம் யாத்திரை இன்று மயிலாடுதுறை மாவட்ட சீர்காழிக்கு வந்தது... எருக்கூர், சீர்காழி, பகுதிகளில் நடைபெற்ற யாத்திரை நிகழ்வுகளில் அர்ஜூன் சம்பத் பங்கேற்று பேசினார். சீர்காழியில் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் சொன்னதாவது:

 புரொபைல் போட்டோ

புரொபைல் போட்டோ

"சமூக ஊடகங்களில் தங்களது முகப்பு படமாக தேசியக் கொடியை வைக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் கருணாநிதி தேசியக் கொடியேற்றிய முகப்பு படத்தை தமிழக முதல்வர் வைத்துள்ளார். இதில் எதற்கு அரசியல்? இது தவறான முன்னுதாரணம்... திமுகவோ, கருணாநிதி குடும்பமோ சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது போன்று சரித்திரத்தை திரிப்பது ஆகும். முதல்வர் தேசியக் கொடியை முகப்பு படமாக வைக்க வேண்டும்...

 வெறுப்புணர்வு

வெறுப்புணர்வு

தமிழ்நாடு தினம் கொண்டாடுவதில் அக்கறை எடுத்துக் கொண்ட தமிழக அரசு, இந்தியாவின் 75-வது சுதந்திரக் கொண்டாட்டத்தில் அக்கறை செலுத்தாமல் இருப்பது வருந்தத்தக்கது. 75- வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை அரசு விழாவாக முதல்வர் நடத்த வேண்டும்... திமுகவின் ஓராண்டு கால ஆட்சியில் பிரிவினை வாதம் அதிகம் வளர்ந்துள்ளது. தேசிய வாதம் மறைக்கப்பட்டிருக்கிறது. ஊழல் பெருகியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பால் விலை உயர்வு உள்ளிட்டவை ஓராண்டு கால ஆட்சியில் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

 கருணாநிதி

கருணாநிதி

40 மக்களவை உறுப்பினர்களால் எந்தவித பயனும் இல்லை. எப்போதும் மத்திய அரசுடன் மோதல் போக்கையே கையாள்கின்றனரே தவிர, பாராளுமன்றத்தில் தமிழக வளர்ச்சிக்காக எவ்வித குரலும் எழுப்பவில்லை என்றார்.தமிழகம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் வைப்பதற்கு இடமில்லாமல் மழையிலும் வெள்ளத்திலும் நனையும் வேளையில், கருணாநிதியின் பேனாவிற்கு 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய நினைப்பது நியாயமா? என்று அர்ஜுன் கேள்வி எழுப்பி உள்ளார்..

 நெல் மூட்டைகள்

நெல் மூட்டைகள்

விரைவில் காமராஜரின் தேசிய ஆட்சியை பாஜக அமைக்கும் என்பதுடன், பேனா நினைவு சின்னத்தை அமைத்தால் வெகுண்டெழுந்து போராடுவோம் என்றும் அர்ஜுன் சம்பத் ஏற்கனவே எச்சரித்து வரும் நிலையில், நெல் மூட்டைகள் வைப்பதற்கு இடமில்லாமல் மழையிலும் வெள்ளத்திலும் நனையும் வேளையில், கருணாநிதியின் பேனாவிற்கு 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய நினைப்பது நியாயமா? என்றும் கேட்டுள்ளது, திமுகவை கூடுத6லாக எரிச்சலாக்கி வருகிறது.

ஸ்டண்ட் மாஸ்டர்

ஸ்டண்ட் மாஸ்டர்

இதனிடையே, கனல் கண்ணன் விவகாரத்தையும் அர்ஜுன் சம்பத் கையில் எடுத்துள்ளார்.. "கோவில் அருகில், 100 மீட்டருக்குள் மத பிரசாரம் செய்ய கூடாது... அப்படி இருக்கும்போது, ஸ்ரீரங்கம் கோவில் முன் ஈ.வெ.ரா சிலையை வைத்திருக்கிறார்கள்.. "ரங்கநாதரையும், தில்லை நடராஜரையும் பீரங்கி வைத்து பிளக்க வேண்டும்" சொன்னவர்களை இதுவரை கைது செய்யவில்லை... ஆனால், சினிமா ஸ்டண்ட் இயக்குனர் 'கனல்' கண்ணன் தன் கருத்தை சொல்லி உள்ளார்.. உடனே அவர் மீது வழக்கு போடுகின்றனர்... திராவிட மாடல் ஆட்சி என்று முதல்வர் ஸ்டாலின் சொல்வதெல்லாமே, மக்களுக்கு செய்யும் துரோகம்தான்" என்று அர்ஜுன் சம்பத் சீறியிருந்ததும், திமுகவை மேலும் கடுப்பாக்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+