"மாமியாரிடம்" கவிழ்ந்த மாப்பிள்ளை.. பக்கத்திலே படுத்திருந்த மனைவியை காணோமாமே.. போலீசுக்கு ஓடிய கணவர்
ராஜஸ்தானில் மருமகனுடன் ஓடிப்போன மாமியாரை குடும்பமே தேடி கொண்டிருக்கிறதாம்
ஜெய்ப்பூர்: பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த மனைவியை காணோம் என்று போலீசுக்கு கதறி கொண்டே ஓடியிருக்கிறார் கணவர்.. புத்தாண்டு தினத்தன்று, விடிகாலையில் மனைவியை காணாமல் பதறிப்போய், போலீசில் புகாரும் தந்துள்ளார்.
மாமியார் மருமகள் உறவு வலுவாக அமைந்தாலே அந்த குடும்பமே ஆரோக்கியமாக தழைத்து வளரும்.. மாமியார் மருமகள் என்பவர்கள், அம்மா பெண் போல அல்லது நல்ல தோழியாக இருந்தால் அதைவிட சிறப்பு வேறு இருக்க முடியாது.
இதேபோலத்தான் மாமியார் - மருமகன் உறவும்.. இன்னொரு தாயாக மாமியாரை பாவிக்கும் மருமகன்கள் கிடைப்பதும், இன்னொரு மகனாக மருமகனை அரவணைக்கும் மாமியார் கிடைப்பதும் அபூர்வம்தான்.

கோயில் குளம்
சில சமயம், இந்த உறவுமுறைகளில் ஏற்படும் சிக்கலே, வன்முறைகளுக்கும், குடும்பம் சிதைவதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது... மாமியார் - மருமகன் உறவு தொடர்பான சில விநோத சம்பவங்கள் நம் நாட்டிலேயே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.. சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலத்திலும் ஆச்சரிய நிகழ்வு ஒன்று நடந்தது.. அந்த இளம் தம்பதிக்கு ஐந்து வருடமாக குழந்தை பாக்கியமே இல்லை.. ஒரு குழந்தை பிறக்காதா என்று ஏங்கியபடி கோயில் குளமாக சுற்றினார்கள்.. இந்த நிலையில் ஒருநாள் அந்த கணவர், திடீரென ஒரு குழந்தையுடன் வீட்டுக்கு வந்துள்ளார்..

ஆசை ஆசையாய்
குழந்தை யாருடையது என்று மனைவி கேட்டதற்கு, இந்தக் குழந்தையை தத்தெடுத்துவிட்டேன் என்று கணவர் சொல்லி உள்ளார். கடைசியில் பார்த்தால், அந்த குழந்தை இந்த கணவருக்கு பிறந்ததுதான்.. அம்மா யாரு தெரியுமா? அந்த கணவரின் மாமியார்தான்!.. அதாவது மாமியாருக்கும், மருமகனுக்கும் இடையே எப்படியோ கனெக்ஷன் ஆகி, மாமியார் வயிற்றில் கரு வந்து விட்டது.. ஆனால் மருமகனுக்கு அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்க ஆசை.. மாமியாரும் ஒத்துக் கொண்டார். இதையடுத்து மாமியாரை யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் தங்க வைத்தார். பிரசவமும் நல்லபடியாக நடந்தது. அழகான குழந்தையும் பிறந்தது. இந்த சம்பவம் உபியில் மிகுந்த பரபரப்பையும், அதிர்ச்சியையும் அப்போது ஏற்படுத்தியிருந்ததை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருந்தன..

மாமரத்தில்
அதேபோல ராஜஸ்தானில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு கொடூரம் நடந்தது.. பார்மர் மாவட்டத்தில் தரியா என்ற 38 வயது மாமியாரும், ஹோட்டராம்பில் என்ற 25 வயது மருமகனும் முறையற்ற உறவில் இருந்து வந்துள்ளனர்.. வீட்டிற்கு விஷயம் தெரிந்துவிட்டதால், ஒரே வீட்டிலும் வாழ முடியாமல், வீட்டை விட்டு வெளியேறினாலும், தங்களை குடும்பத்தினர் நிம்மதியாக வாழ விடமாட்டார்கள் என்று நினைத்து, மாமியார், மருமகன் 2 பேருமே, ஊருக்கு வெளியே, ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.. இப்போதும் ஒரு அக்கிரமம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.

மாமியார் மாயம்
சிரோகி மாவட்டத்தில் உள்ளது சியாகாரா என்ற கிராமம்... இங்கு வசித்து வந்தவர் ரமேஷ்... இவருக்கு 3 மகள்கள் உள்ளனர்.. ரமேஷ் தன்னுடைய மூத்த மகள் கிஷ்ணாவை நாராயணன் ஜோகி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்... இந்த நிலையில் நாராயணன் ஜோகி, தன்னுடைய புது மனைவியுடன், மாமியார் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.. அப்போது மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையே திடீரென காதல் பற்றிக் கொண்டது.. அது தகாத உறவு வரை கொண்டு போய்விட்டது.. ஒருகட்டத்தில் இருவருமே சேர்ந்து பிரிந்து வாழ முடியாத நிலைமைக்கும் ஆளாகிவிட்டனர்..

ஓடிட்டாரு
கடைசியில், புத்தாண்டு அன்று, புது வாழ்க்கையை தொடங்குவதற்காக, 2 பேருமே வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டனர்.. விடிகாலை நேரத்தில் மாமியாரும் மருமகனும் வெளியேறியுள்ளனர்... இதனால் ரமேஷ் அதிர்ந்து போய், போலீசுக்கு ஓடினார். "கல்யாணம் முடிந்த பிறகு, மகளும் மருமகனும் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்... அப்படித்தான், மருமகன் டிசம்பர் 30ம் தேதி எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.. அப்போது நானும் மருமகனும் அன்றைய தினம், கூடுதலாகவே தண்ணி அடித்தோம்..

மாயமான மாமியார்
போதையில் நான் விழுந்துவிட்டேன்.. மறுநாள் காலையில் கண்விழித்து பார்த்தபோது, பக்கத்தில் இருந்த என் மனைவியையும் மருமகனையும் காணவில்லை. என்னுடைய மனைவியை மருமகன் மயக்கிவிட்டார்.. அவர்தான் என் மனைவியை இழுத்து சென்றுள்ளார், என் மனைவியை மீட்டு தாருங்கள் என்று அந்த புகாரில் சொல்லி உள்ளார் ரமேஷ்.. இந்த புகாரின்பேரில் மாமியார் மருமகனை போலீசாரும் தேடி கொண்டிருக்கிறார்களாம்.. அப்படியே அந்த ஜோடி திரும்பி வந்தாலும், மகளின் மனநிலையும், அவரது வாழ்க்கையும் என்னாகும் என்று தெரியவில்லை..!
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications