ஆணுறுப்பில் "கீறல்" போட்ட மனைவி.. மார்பில் உட்கார்ந்து.. இதுதான் காரணம்! கணவன் சீரியஸா இருக்கிறாராமே
கான்பூர்: உத்தரபிரதேசத்தில், மனைவியால் தாக்கப்பட்ட கணவனின் உடல்நிலை மேலும் மோசடைந்திருப்பதாகவும், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் கடந்த 2 நாட்களாகவே சோஷியல் மீடியாவில் வட்டமடித்து வருகிறது.. அத்துடன் கணவனை கொடூரமாக தாக்கும் இந்த வீடியோவானது, அதற்குமேல் பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய செய்து வருகிறது.

பிஜ்னோர் மாவட்டத்தை சேர்ந்தவர் மனன் ஜைதி.. மனைவி பெயர் மெஹர் ஜஹான்... சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும், மெஹருக்கு, இளைஞர் ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார்.. இது நாளடைவில் கள்ளக்காதலாக அரும்பியது.. இந்த விஷயம் கணவனுக்கு தெரியவந்து, மனைவியை கண்டித்துள்ளார்.. பலமுறை அட்வைஸ் செய்திருக்கிறார். ஆனாலும் மெஹர், கணவனின் பேச்சை கொஞ்சமும் மதிக்கவில்லை.
மதிக்கவேயில்லை: தொடர்ந்து அந்த கள்ளக்காதலில் மூழ்கிவந்துள்ளார்.. நாளுக்கு நாள் இது தொடர்பான தகராறு தம்பதிக்குள் வெடித்து வந்த நிலையில், ஒருகட்டத்தில் பெண்ணின் வீட்டிற்கே, விஷயத்தை கொண்டு போனார் கணவர்.. அப்போதும் மெஹர் யாருடைய பேச்சையும் மதிக்கவில்லை.. ஆனால், தன்னை பற்றி, தன்னுடைய அம்மா வீட்டிலேயே புகார் கொண்டு சென்றதால், கணவன் மீது கடும் ஆத்திரம் கொண்டார் மெஹர்.
இப்போது இதையே சாக்காக வைத்து, கணவனிடம் தகராறு செய்தார்.. கணவனை தாறுமாறாக தாக்க துவங்கினார்.. ஒருமுறை, பாலில், போதை மாத்திரையை கலந்து கணவருக்கு தந்து, மயக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்... பாலை குடித்து கணவன் மயங்கிவிழுந்த நேரத்தில், மிக கொடூரமாக கணவனை அடித்துள்ளார் மனைவி.. கணவனின் கை கால்களை கட்டிலில் கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார்...
காயங்கள்: ஒவ்வொருமுறையும் பாலில் போதை மாத்திரையை கலந்து தந்து, கணவனை அடித்து சித்ரவதை செய்திருக்கிறார். ஒவ்வொரு நாள் காலை தூங்கி எழுந்தபோதும், உடலில் பல இடங்களில் காயங்களும், ரத்தமுமாய் கிடப்பதை கண்டு பதறியிருக்கிறார் கணவன்.. அதற்குபிறகுதான் உஷாரான கணவன், இந்த அக்கிரமத்தை போலீசாருக்கு ஆதாரத்துடன் நிரூபிக்க முடிவு செய்தார். .இதற்காக மனைவிக்கு தெரியாமல், தன்னுடைய பெட்ரூமில், கேமரா ஒன்றை வாங்கி ரகசியமாக பொருத்தியுள்ளார்...
சம்பவத்தன்று வழக்கம்போல் கணவனை கட்டிப்போட்ட மனைவி, சித்ரவதையையும் நடத்தியிருக்கிறார்.. அந்த கொடுமை அத்தனையும் கேமராவில் பதிவாகிவிட்டது. அந்த வீடியோவில், முதலில் கணவனின் கை கால்களை துணியால் கட்டிலில் கட்டிப்போட்டுவிட்டு, பெரிய கம்பை கொண்டு விளாசுகிறார்... பிறகு, அவர் மீது ஏறி உட்கார்ந்து குரல்வளையை நெரிக்கிறார்..

சிகரெட்: இதற்கு பிறகு, சிகரெட்டை பற்ற வைத்து, வாயில் வைத்து புகைக்கிறார்.. பிறகு வாயில் சிகரெட்டுடனேயே கணவனின் மார்பில் ஏறி உட்கார்ந்து கொண்டு, அவரது உடம்பெல்லாம் நெருப்பால் சுடுகிறார்.. இதற்கு பிறகு, கத்தியை எடுத்து வந்து, கணவனின் ஆணுறுப்பை கீறி காயப்படுத்துகிறார்.. அப்போதுதான் வலி தாங்க முடியாமல், கணவன் அலறி துடிக்கிறார்.
இந்த வீடியோ காட்சிகளுடன் போலீசுக்கு ஓடினார் கணவர்.. பிறகு மனைவி மீது புகாரையும் தந்தார்.. இந்த புகாரின்பேரில், மெஹர் ஜஹான் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கொலை முயற்சி, தாக்குதல், சித்திரவதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்ததுடன், அந்த பெண்ணையும் கைது செய்துள்ளனர்..
காரணம்: மனைவியின் இந்த கொடூர நடவடிக்கைகளுக்கு காரணம் என்ன என்பதும் தற்போது வெளியாகியிருக்கிறது.. இந்த தம்பதிக்கு கல்யாணமாகி 1 வருடம்தான் ஆகிறதாம். ஆனால், மாமியார் குடும்பத்துடன், மெஹருக்கு ஒத்துப்போகவில்லை.. எனவே, கல்யாணம் ஆன ஒருசில நாளிலேயே தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று கணவரிடம் சொல்ல ஆரம்பித்தாராம்.
"எக்காரணம் கொண்டும் தனிக்குடித்தனம் போக முடியாது, எல்லாரும் ஒன்றாக வாழ்வதுதான் வீடு" என்று மனைவியிடம் கணவர் சொல்லி உள்ளார். ஆனால், தனிக்குடித்தனம் போய்த்தான் ஆக வேண்டும், அதுவரை நிம்மதியாக விடமுடியாது என்று சொல்லி, இப்படியான அராஜகங்களில் இறங்கிவிட்டாராம் மெஹர்,
வீடியோ: இந்த வீடியோ சம்பவம் நேற்று முன்தினம், அதாவது மே 5-ம் தேதி நடந்துள்ளதாம்.. ஆனால், அதறகு முன்பெல்லாம், கணவரின் வாயில் போதைப்பொருளை திணித்து திணித்து தாக்குவாராம்.. அதற்கு பிறகு, வலியால் கத்தக்கூடாது என்பதற்காக, வாயில் துணியை கட்டிவிட்டு, அடித்து உதைப்பாராம்.. இப்போது அந்த கணவனின் உடல்நிலை படுமோசமாக இருக்கிறதாம்.. ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை தரப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது..!!
மன்னிக்கும் பக்குவம், விட்டுக்கொடுக்கும் பெருந்தன்மை, கருணையின் மறுவடிவம், அன்பின் ஊற்று, என காலம் காலமாக போற்றப்பட்டு வரும் எத்தனையோ பெண்களுக்கு நடுவில், இப்படியும் சில பெண் அவதாரம்?? இந்த பாழாய்போன கள்ளக்காதல் இன்னும் எத்தனை உயிரை காவு வாங்க போகிறதா?
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications