ஒரே நேரத்தில் 3 ஆண்களுடன் மனைவி.. விழுந்தடித்து ஓடி வந்த கணவர்.. அங்கே பார்த்தால்.. கலிகாலம்
ஹோட்டலில் ரூம் போட்டு ஜாலியாக இருந்த மனைவியை கையும் களவுமாக பிடித்தார் கணவர்
ஜெய்ப்பூர்: தன்னுடைய மனைவி ஒரு போலீஸ்காரருடன் ஹோட்டலில் ஜாலியாக இருப்பதாக கணவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. அந்த தகவலின் பேரில் அந்த கணவரும் ஹோட்டலுக்கு ஓடினார்.. கடைசியில் என்னாச்சு தெரியுமா?
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்த நபர்.. ஒரு காலேஜில் விரிவுரையாளராக வேலை பார்த்து வருகிறார்..
2015ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது.. ஆனால், மனைவியுடன் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.. இதனால், 2 பேரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டனர்.

கான்ஸ்டபிள்கள்
ஒருகட்டத்தில் வெறுத்துப் போன மனைவி, கடந்த 2019ம் ஆண்டு கணவரை பிரிந்து சென்றுவிட்டார்.. தன் பெற்றோருடன் வசித்து வர ஆரம்பித்தார்.. மேலும், கணவன் மீது குடும்ப வன்முறை மற்றும் ஜீவனாம்ச வழக்கும் மனைவி தொடர்ந்தார்.. இது தொடர்பாக புகார் தரவும், விசாரணைக்காகவும், அடிக்கடி போலீஸ் ஸ்டேஷன் செல்ல ஆரம்பித்தார்.. அப்போது அங்கிருக்கும் போலீஸ்காரர்களிடம், இந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. எதற்காக ஸ்டேஷனுக்குள் கால் வைத்தாரா, அதை மறந்துவிட்டு, அந்த போலீஸ்காரர்களிடம் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார்.

ஹோட்டல் ரூம்
இந்நிலையில், மனைவி ஒரு ஹோட்டலில் போலீஸ்காரருடன் உல்லாசமாக இருப்பதாக கணவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. இதனால் அதிர்ந்து போன கணவர், அந்த ஹோட்டலுக்கு விரைந்து சென்றார்.. அங்கே பார்த்தால், மனைவியுடன், 3 பேர் நெருக்கமாக இருந்துள்ளதை நேரில் கண்டு உறைந்து நின்றார்.. அந்த 3 பேருமே போலீஸ்காரர்கள்.. புகார் கொடுக்கப்போன ஒரே ஸ்டேஷனில் வேலை பார்ப்பவர்கள் ஆவர்.. திடுதிப்பென்று கணவன் வந்து நிற்பதை அறிந்ததும், 3 போலீஸ்காரர்கள், மனைவி என 4 பேருமே எகிறி குதித்து தப்பி உள்ளனர்.. ஆனால், அவர்கள் ஒன்றாக இருந்ததை, கணவர் வீடியோ எடுத்துவிட்டார்.

ஜீவனாம்சம்
இதற்கு பிறகு நேராக போலீசுக்கு போனார்.. ஆதாரங்களுடன் புகார் மனு அளித்தார்.. பிறகு செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "என் மனைவி என்னிடம் தகராறு செய்து கொண்டு அவர் அம்மா வீட்டில் வசித்து வருகிறார். என்னிடம் மாதந்தோறும் ஜீவனாம்ச தொகை பெற்று வருகிறார்... என் மனைவியை 3 கான்ஸ்டபிளுடன் ஹோட்டலில் ஒன்றாக இருப்பதை பார்தேன்... இதுதொடர்பாக பார்மர் எஸ்பியை சந்தித்து புகார் அளிக்க எஸ்பி அலுவலகம் வந்தேன். ஆனால், வரும் வழியில் அடையாளம் தெரியாத நபர்கள் என்னுடைய பைக்கை வழிமறித்து தாக்கினர். பிறகு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் எஸ்பி ஆபீசுக்கு சென்று புகார் அளித்தேன்.

மூல காரணம்
பலோத்ரா காவல் நிலைய காவலர் சந்தீப் சவுத்ரி மற்றும் மேலும் இரு போலீஸ்காரர்கள் எனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தனர். அதனால், மூன்று போலீஸ் கான்ஸ்டபிள்கள் மீதும் துறை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எஸ்பியிடம் புகார் அளித்துள்ளேன் என்றார்... இதையடுத்து, கணவர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட 3 போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. இதற்கெல்லாம் மூல காரணமான அந்த பெண்ணின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை..!












Click it and Unblock the Notifications