தன் சிலையைத் தானே திறந்து வைத்த தானைத் தலைவன் மாரடோனா.. கொல்கத்தாவில் கோலாகலம்
பிரபல கால்பந்து வீரர் டியகோ மாரடோனாவிற்கு கொல்கத்தாவில் சிலை திறக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

கொல்கத்தா: பிரபல கால்பந்து வீரர் டியகோ மாரடோனா கொல்கத்தா வந்துள்ளார். மூன்று நாள் பயணமாக அவர் கொல்கத்தாவில் தங்கி இருக்கிறார்.
அன்னை தெரசா உருவாக்கிய தொண்டு நிறுவனங்களுக்காக நேற்று அவர் கால்பந்து விளையாடினார். இந்த நிகழ்வில் கலந்து கொளவதற்காகவே அவர் முக்கியமாக இந்தியா வந்துள்ளார்.
அவர் கால்பந்து போட்டியில் விளையாடுவது மட்டும் இல்லாமல் கங்குலி நடத்தும் கிரிக்கெட் போட்டி ஒன்றிலும் கலந்து கொள்கிறார். அதேபோல் நேற்று அவருக்கு கொல்கத்தாவில் சர்ப்ரைசாக சிலை ஒன்று நிறுவப்பட்டது.

கொல்கத்தாவில் மாரடோனா
பிரபல அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மாரடோனா தற்போது கொல்கத்தா வந்துள்ளார். அவர் கொல்கத்தாவில் இருக்கும் 'ஸ்ரீபூமி' கால்பந்து கிளப்புடன் நடந்த கால்பந்து போட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அன்னை தெரசா உருவாக்கிய தொண்டு நிறுவனங்களுக்கு பணம் சேர்ப்பதற்காக இந்த போட்டி நடந்தது. இதில் பேசிய அவர் ''நான் கால்பந்து உலகில் கடவுள் இல்லை. நான் சாதராண வீரன்தான். கொல்கத்தாவில் இருப்பது பிடித்து இருக்கிறது'' என்றார்.

உதவித்தொகை
இந்த நிலையில் அந்த நிகழ்வில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாரடோனா நிதி உதவி அளித்தார். ஒரு குழந்தைக்கு 10 ஆயிரம் வீதம் 11 குழந்தைக்கு பணம் அளித்தார். மேலும் அந்த தொண்டு நிறுவனத்திற்காக ஏசி வசதி உள்ள ஆம்புலன்ஸ் ஒன்றும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு அவர் தன் நெருங்கிய தோழியுடன் வந்து இருந்தார்.

சிலை திறக்கப்பட்டது
இந்த நிகழ்வில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் மாரடோனாவிற்கு சிலை திறக்கப்பட்டது. மாரடோனா இந்த சிலையை திறந்து வைத்தார்.1986 அர்ஜெண்டினா அணிக்காக அவர் கால்பந்து உலகக் கோப்பை வாங்கி கொடுத்த புகைப்படம் சிலையாக செய்யப்பட்டு இருந்தது. இந்த சிலை 12 அடி இருந்தது. அதை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருப்பதாக மாரடோனா பேட்டி அளித்துள்ளார்.

கங்குலியுடன் கிரிக்கெட் போட்டி
அவரின் இந்திய பயணத்தில் இன்றைய நிகழ்வாக அவர் கங்குலியை சந்திக்க இருக்கிறார். கங்குலி நடந்தும் கால்பந்து போட்டியில் இவர் மரியாதை நிமித்தமாக கலந்து கொள்வார். இது பெரிய அளவில் கால்பந்து குறித்த கருத்தரங்கம் மாதிரி நடக்க இருக்கிறது. மாரடோனா, கங்குலியுடன் கிரிக்கெட் விளையாடவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications