அரசியல்வாதிகள், அதிகாரிகளின் செல்லப்பிள்ளை.. 'சினிமா தாதா' திலீப்பை போலீஸ் கைது செய்தது எப்படி?
திருவனந்தபுரம்: மலையாள சினிமா உலகில் அரசியல் தொடர்புகள், அடாவடிகளுக்கு பஞ்சமில்லை. அதில் திலீப்பும் விதிவிலக்கில்லை.
நடிகர்களின் அரசியல், தொழிலதிபர்கள், போலீசாருடனான செல்வாக்கு, அவர்களை பெரும் தாதா போல வலம் வரச் செய்துள்ளது. பாவன கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திலீப் அதில் மன்னன்.
மீடியாக்களின் தொடர் அழுத்தம் காரணமாகத்தான் திலீப் கைது செய்யப்பட்டுள்ளாரே தவிர, அவருக்கு முதல்வர் பினராயி விஜயன் முதல் ஆளும் கட்சியின் அனைத்து ஆதரவும் கிடைத்தே வந்துள்ளது.

முதல்வர் திடுக்
பாவனா கடத்தல் சம்பவம் நடந்து ஐந்து மாதங்கள் ஆனபோதிலும், குற்றவாளியை போலீசார் கைது செய்யவில்லை. விசாரணை நடைபெற்றபோதே, இதில் சதி திட்டம் இருப்பதாக தெரியவில்லை என பினராயி விஜயன் கூறினார். பாதிக்கப்பட்ட பெண் மீதே குற்றம் சொல்லுவதை போல முதல்வர் பேச்சு உள்ளதாக கண்டனங்கள் எழுந்தன.

டிவி சேனல்
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டிவி சேனல் கைராலியும், திலீப்புக்கு ஆதரவு செய்திகளை கொடுத்து வந்தது. சேனல் நிர்வாகி சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டியயும் திலீப்புக்கு ஆதரவுகரம் நீட்டியதாக கூறப்படுகிறது.

எம்எல்ஏ டிரைவர்
பாவனாவை கடத்தி துன்புறுத்திய முக்கிய குற்றவாளி பல்சர் சுனில், நடிகர் முகேஷிடம் ஓராண்டுக்கும் மேலாக கார் டிரைவராக வேலை பார்த்துள்ளார். முகேஷ் நடிகர் மட்டுமல்ல கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவுமாகும். பல்சர் சுனில் குறித்து தெரியாமல் வேலைக்கு வைத்திருந்ததாக முகேஷ் இப்போது கூறிவருகிறார். ஆனால், இதுபோன்ற ரவுடிகளை டிரைவர் என்ற பெயரில் வேலைக்கு வைத்துக்கொண்டு எதிரிகளை பந்தாடுவது மலையாள திரையுலகின் சில நடிகர்கள் வாடிக்கை என்பதை மக்கள் அறிந்தே வைத்துள்ளனர்.

கோபம்
ஆளும்கட்சி எம்எல்ஏக்களும், நடிகர்களுமான முகேஷ் மற்றும் கணேஷ் ஆகியோர் திலீப்புடன் நல்ல தொடர்பில் இருந்துள்ளனர். எனவேதான், "திலீப் குற்றமற்றவர் என்று இப்போதும் நம்புகிறீர்களா"? என்ற நிருபரின் சாதாரண ஒரு கேள்விக்கு, இருவருமே எரிந்துவிழுந்த காட்சியை கேரளா நேற்று பார்த்தது.

நீக்க முடியாது
திலீப் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்ட பிறகும்கூட, மலையாள சினிமா சங்க தலைவரும், மார்க்சிஸ்ட் எம்பியுமான இன்னோசன்ட், பாதிக்கப்பட்ட நடிகையும், குற்றம்சாட்டப்பட்டவரும், இந்த சங்கத்தின் பிள்ளைகள்தான் என்று கூறி திலீப்புக்கு வக்காலத்து வாங்கினார். மீடியாக்களின் கண்டனத்தையடுத்து மக்கள் கொதிப்படைந்ததால்தான் திலீப் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார்.

அதிகாரி ஆதரவு
பாவனா வழக்கில் முதல் ரவுண்டு விசாரணை முடிவடைந்த நிலையில், போலீஸ் கூடுதல் இயக்குநர் ஜெனரல் ஒருவர், திலீப்பின் நெருங்கிய நண்பர் நாதிர்ஷாவை ஹோட்டலில் வைத்து சந்தித்து, வழக்கின் நிலை குறித்து விவரித்துள்ளார். இந்த செய்தியும் வெளியில் வந்தது. இப்படி அரசியல், அதிகாரிகள் மட்டத்தில் திலீப்புக்கு செல்வாக்கு அதிகம்.

தொழில்கள்
இதனால்தான் ரெஸ்டாரண்டுகள், ரியல் எஸ்டேட் தொழில் என பல தொழில்களை நடிகர்கள் நடத்தி வருகிறார்கள். மீடியாக்கள் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டதன் விளைவாகவும், பாதிக்கப்பட்ட பெண் பாவனா உறுதியாக இருந்ததாலும்தான் வேறு வழியின்றி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கேரள காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமை இப்படித்தான் முதல்வரை விமர்சனம் செய்து வருகிறது. எனவே மீடியாக்களின் தொடர் நெருக்கடி இல்லாவிட்டால் திலீப்பை சட்டத்தின் ஓட்டைகள் வழியாக தப்பிக்கச் செய்ய கேரள அதிகார வர்க்கம் அனைத்து செயல்களையும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications