காவ்யாவை அடைவதற்காக கணவரை ரவுடிகளை வைத்து மிரட்டிய திலீப்! பகீர் தகவல்கள் அம்பலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: காவ்யா மாதவனை அடைவதற்காக அவரது கணவரை ஆள் வைத்து மிரட்டியுள்ளார் திலீப். இத்தகவல் மீண்டும் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

1998ல் நடிகை மஞ்சுவாரியரை திருமணம் செய்திருந்த திலீப்புக்கு, மற்றொரு மலையான நடிகையான காவ்யா மாதவன் மீதும் மோகம். இதனால் இருவரும் காதலில் திளைத்து, மகிழ்ச்சியாக காலத்தை கடத்தி வந்தனர்.

இருப்பினும் 2009, பிப்ரவரி 9ம் தேதி, குவைத்தில் வசிக்கும் நிஷால் சந்திரா என்பவருடன் காவ்யாவுக்கு திருமணமானது.

குவைத் ரிட்டர்ன்

குவைத் ரிட்டர்ன்

தம்பதிகள் உடனடியாக குவைத் சென்றனர். ஆனால், அதே ஆண்டு ஜூன் மாதம், காவ்யா கேரளாவுக்கே திரும்பி வந்தார். 2010 ஜூலை 24ம் தேதி, கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போனார். 2011, மே 30ம் தேதி இவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.

கள்ளக்காதல்

கள்ளக்காதல்

விவாகரத்துக்கான காரணம் பற்றி காவ்யா வாயே திறக்கவில்லை. ஆனால் அவரது கணவரோ, மலையாள நடிகர் ஒருவரோடு காவ்யாவுக்கு காதல் இருப்பதாகவும், திருமமணத்திற்கு பிறகும், அது கள்ளக்காதலாக தொடர்வதாகவும் குற்றம்சாட்டியிரு்நதார். அது எந்த நடிகர் என நிஷால் கூறவில்லை.

தாய் பகீர்

தாய் பகீர்

ஆனால் பிறகு ஒருமுறை, நிஷால் தாயார் பேசிய ஆடியோ ஒன்று வைரலாக சுற்றியது. அந்த ஆடியோவில், காவ்யாவை தனது மகனிடமிருந்து பிரித்தது, நடிகர் திலீப் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும், தனது மகனை அடியாட்களை வைத்து திலீப் மிரட்டிதான் விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்ததாக அந்த ஆடியோவில் நிஷால் தாய் கூறியிருந்தார்.

பாவனா பின்னணி

பாவனா பின்னணி

காவ்யாவுடன் ஹோட்டல் அறையில் ஒன்றாக திலீப் இருந்ததை நடிகை பாவனா பார்த்து, அது மஞ்சு வாரியருக்கு தெரிந்த பிறகு திலீப்புடனான திருமண உறவை மஞ்சு வாரியர் முறித்துக்கொண்டார். இத்தம்பதிக்கு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Nishal had alleged that Kavya was cheating on him. He had claimed that Kavya was having an illicit affair with a popular Malayalam actor.
Please Wait while comments are loading...