ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்போது?: நீதிபதி குமாரசாமியின் கையில் முடிவு!
பெங்களூரு: ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு வழங்குவது பற்றி கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் நீதிபதி குமாரசாமி தீர்ப்பினை எப்போது வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கர்நாடக அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக் கோரும் அன்பழகனின் மனுவை உச்சநீதிமன்றம் வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ள நிலையில் ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை இது பாதிக்காது என்றே கூறப்படுகிறது. அதற்குக் காரணம் தீர்ப்பு தேதியை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமியே முடிவு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோகூர், பானுமதி அடங்கிய பெஞ்ச் அறிவுறுத்தி உள்ளதால் ஜெயலிதா மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 11ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

அன்பழகன் மனு
இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு விசாரணையில் அரசு தரப்பில் ஆஜராகி வரும் பவானி சிங்கை நீக்க கோரி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
அந்த மனு மீதான இறுதி வாதங்கள் கடந்த 26-ந் தேதியன்று தொடங்கியது. நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஏப்ரல் 7ஆம் தேதி மீண்டும் விவாதம் நடைபெற்றது. வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிந்ததையடுத்து, நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனு மீதான தீர்ப்பு ஏப்ரல் 15ஆம் தேதியன்று வழங்கப்படும் என்று அறிவித்தது.

ஏப்ரல் 15 வரை தடை
மேலும், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் ஏப்ரல் 15 வரை தீர்ப்பு வழங்க இடைக்கால தடை விதித்தும் நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

தீர்ப்பு எப்போது?
இதனிடையே பவானி சிங்கை நீக்கக் கோரி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தொடர்ந்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கப்பட இருந்த நிலையில், நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தால், இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை வழங்க விதித்த தடை இன்றுடன் முடிவடைந்துள்ளது.

குமாரசாமியிடம் முடிவு
ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பளிக்கலாம் என்றும் தீர்ப்பை வழங்குவது குறித்து நீதிபதி குமாரசாமியே முடிவெடுக்கவும் அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தள்ளிப்போகும் தீர்ப்பு
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவினை அடுத்து தீர்ப்பை எப்போது வேண்டுமானாலும் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வழங்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் உடனடியாக தீர்ப்பு வழங்குவாரா? அல்லது பவானிசிங் மீதான தீர்ப்பு வரும்வரை காத்திருப்பாரா? என்பது பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவேளை இப்படியானால்
உச்சநீதிமன்றத்தில் அன்பழகன் மனு நிலுவையில் உள்ளதால், அதன் பிறகு ஜெயலலிதா அப்பீல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என நீதிபதி குமாரசாமி முடிவு செய்யும் பட்சத்தில், முதலில் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட வேண்டும். அதன் பிறகு 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டு, குழு அமைக்கப்படும். அவர்கள் மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்க மேலும் சில மாதங்கள் ஆகலாம். இதனால் ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பும் தள்ளிப் போக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை அன்பழகனின் கோரிக்கை ஏற்கப்பட்டு, வழக்கு விசாரணையில் இருந்து பவானி சிங் நீக்கப்பட்டால் புதிய வழக்கறிஞர் நியமிக்கப்பட்டு, வழக்கு விசாரணை மீண்டும் நடைபெறும். அதன் பின்னரே ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்.

ஜாமின் நீட்டிக்கப்படுமா?
ஜெ., உள்ளிட்ட 4 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமின் ஏப்ரல் 18ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் ஜாமினை மேலும் நீட்டிக்க வேண்டும் என ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை ஏற்று, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் ஜாமினை உச்சநீதிமன்றம் நீட்டிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், அரசு வழக்கறிஞர் சிக்கல் தீர சில மாதங்கள் ஆக வாய்ப்பு உள்ளது.

குமாரசாமி ஓய்வு
இந்நிலையில் ஜெயலலிதா அப்பீல் மனுவை விசாரித்து வரும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வரும் ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். அரசு வழக்கறிஞர் நியமன விவகாரம் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடையாவிட்டால், ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பை குமாரசாமியால் வழங்க முடியாது. புதிய நீதிபதி நியமிக்கப்பட்ட பின்னர் அப்பீல் மனு விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தலை எதிர்கொள்வது எப்படி?
எப்படி என்றாலும் இன்னும் இருமாதங்களுக்குள் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டால் அதை வைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளலாம் என்பது அதிமுகவின் கணக்கு... தீர்ப்பு தேதி தள்ளிப்போகும் பட்சத்தில் அதற்கான வியூகம் வகுப்பதில் அதிமுகவினருக்கு சிக்கல் என்றே கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications