டெல்லி தேர்தல் செலவுகளை தமிழக மா.செக்கள் தலையில் ஏற்றும் தேமுதிக

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தல் செலவுகளை நீ்ங்கள்தான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தேமுதிக மாவட்ட செயலாளர்களுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இப்படி அடுத்தடுத்து எங்களுக்கு செலவாகவே வைத்தால் எப்படி என்றும் மாவட்டச் செயலாளர்கள் கண்ணைக் கசக்குகின்றனராம்.

ஏற்கனவே லோக்சபா தேர்தலுக்காக ஆளுக்கு இவ்வளவு வசூலிக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில் டெல்லி செலவையும் சேர்த்திருப்பது கட்சிக்காரர்களை கலங்கடித்துள்ளதாம்.

ஏழை வேட்பாளர்கள்

ஏழை வேட்பாளர்கள்

டெல்லிதேர்தல் களத்தில்நிறுத்தப்பட்டுள்ள தேமுதிக வேட்பாளர்கள் மிகவும் வசதி குறைந்தவர்களாம்.

செலவுக்கு என்ன செய்வது

செலவுக்கு என்ன செய்வது

செலவுக்கு என்ன செய்வது என்று கூடத் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

நாங்க தர்றோம்

நாங்க தர்றோம்

இந்த நிலையில்தான் அவர்களுக்குகட்சி மேலிடம் ஆறுதல் கூறி, செலவுக்கு கட்சி மேலிடம் பணம் வழங்கும் என்று உறுதியளித்துள்ளதாம்.

ஆனால் ஒரு பைசா கூட வரவில்லை

ஆனால் ஒரு பைசா கூட வரவில்லை

ஆனால் இதுவரையிலும் கட்சி மேலிடத்திலிருந்து காசு ஏதும் வரவில்லையாம். இதனால் பிரசாரத்திற்கு வருவோருக்கு சாப்பாடு கூட வாங்கிக் கொடுக்க முடியாத நிலையில் வேட்பாளர்கள் தவித்து வருகிறார்களாம்.

மா.செக்களுக்கு உத்தரவு

மா.செக்களுக்கு உத்தரவு

இந்த நிலையில்தான் மாவட்டச் செயலாளர்கள் டெல்லிதேர்தல் நிதி அளிக்குமாறு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாம்.

எங்கே போவது

எங்கே போவது

இதனால் தமிழக மாவட்டச் செயலாளர்கள் கடும் கடுப்பாகியுள்ளனராம். இப்படி எங்களிடமே பணத்தை வாங்கிக் கொண்டு கட்சியை எத்தனை நாளைக்கு நடத்தத் திட்டமிட்டுள்ளார் கேப்டன் என்று அவர்கள் குமுறிக் கொண்டுள்ளனராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+