3வது அணி இல்லை- திமுக தனித்தே போட்டி: டி.ஆர். பாலு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபா தேர்தலில் 3வது அணியில் இணைந்து போட்டியிடாமல் தனித்தே திமுக போட்டியிடும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர். பாலு, திமுக பொதுக்குழு கூட்டத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக-விடம் இருந்து விலகியே இருக்க ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் மட்டுமே காங்கிரஸ் கூட்டணியை புறக்கணிக்கவைல்லை, திமுக எழுப்பிய பல்வேறு கோரிக்கைகளை காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை.

இலங்கை தமிழர் பிரச்சினையில் திமுக தலைவர் கருணாநிதி வெளிப்படுத்திய உணர்வுகளை காங்கிரஸ் சரியாக கையாளவில்லை. 3-வது அணியில் இணையமாட்டோம். திமுக தனித்தே போட்டியிடும் என்றார்.












Click it and Unblock the Notifications