கோயிலில் சிவராத்திரி நிகழ்ச்சி நடத்த விசிக, திக எதிர்ப்பு
இந்து அறநிலையத் துறையின் சிவராத்திரி நிகழ்ச்சியை எதிர்க்கும் விசிக, திக மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் மார்ச் 1-ஆம் தேதியன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கலாசார நிகழ்ச்சிகளை நடத்த இது சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளதை, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் திராவிடர் கழகம் கடுமையாக விமர்சித்துள்ளன.
இதுகுறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், "ராமகிருஷ்ண மடத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சுமார் 40,000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்து அறநிலையத் துறை இவ்வளவு பெரிய நிகழ்வை நடத்துவது இதுவே முதல் முறை.
திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்த நிகழ்வு ஒரு மதத்தை வளர்ப்பது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூத்த தலைவர் வன்னி அரசு, அரசுத் துறையானது சில குறிப்பிட்ட நம்பிக்கையின் கருத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பாடுகளை ஏற்பாடு செய்யக்கூடாது என்று கூறியதோடு, கடவுள் அல்லது தனியார் நிறுவனங்கள் பின்பற்றும் பாணியை அரசு பின்பற்றக் கூடாது. இதுதான் திராவிட மாடல் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
- ராமநாதபுரம் நாட்டுப்படகு - விசைப்படகு மீனவர்கள் நடுக்கடலில் மோதல்: சிக்கலுக்கு தீர்வு என்ன?
- தமிழக மீனவர்கள் 55 பேர் கைது: நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர் கடிதம்; இலங்கை அமைச்சர் விடுத்த கோரிக்கை
அவருடைய கருத்துகளை எதிரொலித்த திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கி.வீரமணி, பகுத்தறிவாளர்கள் மற்றும் மதச் சார்பின்மைவாதிகளின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், குறிப்பிட்ட சமூகத்தை திருப்தி படுத்துவதைத் தவிர்க்க வேண்டுமெனக் கூறியுள்ளார்," என்று குறிப்பிட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததோடு, ஒரு விசைப்படகையும் சிறை பிடித்துள்ளது என்று தி இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த செய்தி, "ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்கள், கச்சத் தீவு அருகே நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களைக் கைது செய்து, மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். இலங்கை கடற்படை கடந்த 26 நாட்களில் காரைக்காலைச் சேர்ந்த 80 மீனவர்களைக் கைது செய்துள்ளது. இதில் 21 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்," என்று தெரிவிக்கிறது.
இரண்டு மாதங்களில் சென்னையில் 585 தெரு மாடுகள் பறிமுதல்
சென்னையில் தெருவில் மாடுகள் சுற்றுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு மாதங்களில் தெருவில் சுற்றிய 585 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதுகுறித்து, "சென்னை மாநகராட்சியில் தெருவில் சுற்றும் மாடுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு மாதங்களில் தெருவில் சுற்றித் திரிந்த 585 மாடுகளை மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்டு, 9.06 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக் கிழமை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பின் படி, தெருவில் சுற்றித் திரியும் ஒவ்வொரு மாட்டிற்கும் 1,550 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். புதுப்பேட்டை மற்றும் பெரம்புரில் உள்ள கொட்டகைகளுக்கு மாடுகளை ஏற்றிச் செல்ல மாநகராட்சியின் சுகாதாரத் துறை வாகனங்களை அனுப்பியுள்ளது.
உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை மீட்க விரும்பினால், மாடு கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் உள்ள துப்புரவு ஆய்வாளர், மண்டல சுகாதார அலுவலர் அல்லது காவல் நிலைய ஆய்வாளரிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். மேலும், மூன்றாவது முறையாக தெருவில் சுற்றும் மாடு கண்டுபிடிக்கப்பட்டால், அதன் உரிமையாளர்களிடம் அது திருப்பி அனுப்பப்படாது. ப்ளூ க்ராஸ் நிறுவனத்திற்கு அனுப்படும் என்று இதுகுறித்த அறிக்கை கூறுகிறது," என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- ரஷ்ய படையெடுப்பு: யுக்ரேனின் எதிர்காலம் என்ன?
- யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி: நாடகத்தில் அதிபரானவர், நாட்டில் அதிபரான கதை
- யுக்ரேன் தலைநகர் கீயவ் தெருக்களில் கடும் சண்டை: வெடிகுண்டு சத்தம் - நேரலை செய்தி
- யுக்ரேனில் ரஷ்யாவின் நுழைவு குறித்து ரஷ்யர்களின் மனநிலை என்ன?
- யுக்ரேன்: ரஷ்யா மீது விதிக்கப்படும் தடைகள் என்ன? சர்வதேச உறவுகளில் தடைகளின் பொருள் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்















Click it and Unblock the Notifications