திமுக கூட்டணிக்கு 132, அதிமுகவுக்கு 95 தொகுதிகள்.. ஏபிபி செய்தி சேனல் எக்ஸிட் போல்
டெல்லி: ஏபிபி ஹிந்தி செய்தி சேனல் நடத்திய எக்ஸிட் போல் கணிப்பில், திமுக கூட்டணி,132 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆக்ஸிஸ் இந்தியா மற்றும், நியூஸ் நேஷன் ஆகிய தேர்தலுக்கு பிந்தைய, கருத்து கணிப்புகள், திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று கூறிய நிலையில், சி-வோட்டர் முற்றிலும் மாறுபட்ட நிலையை காட்டுகிறது.
சி-வோட்டர் கருத்துக்கணிப்புப்படி, தமிழகத்தில் அதிமுக கூட்டணி 139 தொகுதிகளில் வெற்றி பெறும். திமுக, காங்கிரஸ் கூட்டணி, 78 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளது.

இதனிடையே ஏபிபி ஹிந்தி செய்தி சேனல் நடத்திய எக்ஸிட் போல் கணிப்பும் வெளியாகியுள்ளது. இதன்படி திமுக கூட்டணி,132 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆளும் அதிமுக 95 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும், பாஜக 1 தொகுதியில் வெல்லும் என்றும் ஏபிபி கூறுகிறது. அதேநேரம், ம.ந.கூ, பாமக போன்ற கட்சிகள் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
3 கருத்து கணிப்புகள் திமுக சார்பாகவும், 1 கருத்து கணிப்பு மட்டும் அதிமுக ஆதரவாகவும் அமைந்துள்ளது. இதில் எது சரியான கணிப்பு என்பது மே 19ம் தேதி மதியத்திற்குள் தெரியவந்துவிடும். கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 150 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 23 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications