பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டது ஏன் தெரியுமா?
திருவனந்தபுரம்: நடிகை பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகை பாவனா, கடந்த பிப்ரவரி 17ம் தேதி காரில் வந்துகொண்டிருந்தபோது ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, காரில் மானபங்கப்படுத்தப்பட்டார். இதுதொடர்பாக, பல்சர் சுனி என்பவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். திடீர் திருப்பமாக, பல்சர் சுனியின் கூட்டாளி, தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக நடிகர் திலீப், போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், திலீப்பிடமும், அவருடைய மேலாளர் அப்புண்ணி, சினிமா இயக்குனர் நாதிர் ஷா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பல்சர் சுனி அளித்த வாக்குமூலத்தில், "பாவனாவை பாலியல் தொல்லை செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை, காவ்யா மாதவன் நடத்தும் கடையில் கொடுத்தேன்" என்று தெரிவித்தார்.
இதையடுத்து காவ்யா மாதவன் கடையில் போலீசார் சோதனை நடத்தினர். பல்சர் சுனி, பாவனாவை கடத்துவதற்கு முன்பு, அடிக்கடி தொடர்பு கொண்ட தொலைபேசி எண்களை போலீசார் கண்டறிந்தபோது, அந்த எண்கள், திலீப்புக்கு வேண்டியவர்களின் எண் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
மேலும், சிறையில் இருந்தபடி, திலீப்பின் மேனேஜருடன் பல்சர் சுனி சிலமுறை பேசி உள்ளார். நடிகர் திலீப்புடன் பல்சர் சுனி நிற்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகின.
இதையடுத்து போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில், பாவனா வழக்கில், தொடர்புடைய நபர்களை கைது செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவன் ஆகியோர் எந்த நேரமும் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. திலீப்பை சில மாதங்கள் முன்பு காவ்யா திருமணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications