24 மணிநேர தடையில்லா மின்சாரத்தை வழங்க மின்சாரத்துறை எப்படி நிதி பெறுகிறது தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மின்தடையற்ற நாடாக இந்தியாவை மாற்ற மத்திய அரசு சில ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மத்திய அரசின் மின்சாரத்துறை இணை செயலாளர் ஏ.கே.வர்மா இதுகுறித்து கூறுகையில், 2030ம் ஆண்டுக்குள், மின்சாரத்துறை, 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க உள்ளது. மரபு சாரா எரிசக்தி மற்றும் வழக்கமான முறைகளில் தயாரிக்கப்படும் மின்சாரத் திட்டங்களில் இந்த முதலீடு ஈர்க்கப்பட உள்ளது.

Do you know how Power Ministry get funds for 24X7 power supply?

சர்வதேச எனர்ஜி ஏஜென்சி (IEA) கணக்கீட்டுப்படி, 2015-2040ம் ஆண்டுகளுக்குள், இந்தியா சுமார் $ 845 பில்லியன் மதிப்புக்கு மின் மாற்றி மற்றும் சப்ளை துறைக்கு செலவிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் மீட்டர், பகிர்மான தானியங்கி நிலை, பேட்டரி ஸ்டோரேஜ் மற்றும் உள்ள ஸ்மார்ட் மார்க்கெட் பிரிவில் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா ரூ.2.9 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளது.

சோலார் திட்டங்கள் மூலம் கூடுதலாக 100000 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்க ரூ.5.5 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அனல் மின் நிலையங்கள் வாயிலாக கூடுதலாக 45,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, ரூ.4.4 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளது இந்தியா.

நாட்டிலுள்ள பல்வேறு மின்சார வினியோக நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வந்த நிலை மாறி, சிறப்பாக செயல்பட மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள உதய் திட்டம் பெரும் பலனளிக்கும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்தால் நிதி பற்றாக்குறை நீங்கி, போதிய அளவுக்கு மின் உற்பத்தியில் ஈடுபட முடியும். Source- UDAY.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
According to Dr. AK Verma, IFS Joint Secretary, Ministry of Power, Government of India, Power sector is likely to attract around $ 1 trillion in investments by 2030 across segments such as coal - based and renewable power.
Please Wait while comments are loading...