Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முளைத்து மூணு இலை விடலயே.. 13 வயதில் 2 ஆண் நண்பர்கள்.. அம்மான்னும் பார்க்கலயே.. யாரிந்த கொடூர பொண்ணு

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: தங்களுக்கு ஒரு குழந்தை இல்லையே என்று தம்பதியினர் இருவரும் தினம் தினம் கவலைப்பட்டு கொண்டிருந்தார்கள்.. பிள்ளை செல்வம் நாளுக்கு நாள் வாட்டி வந்தநிலையில், ஏதாவது ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.. அதன்படியே அழகான பெண் குழந்தையை தத்தெடுத்தனர்.. அந்த குழந்தைக்காகவே வாழ்க்கையை வாழ முடிவு செய்தனர்.. ஆனால், கடைசியில் அந்த குழந்தை செய்த காரியம் இருக்கே???

Odisha 13 year old Girl 2 boy friends 13 2

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜலட்சுமிகர் என்ற பெண்ணுக்கு தற்போது 54 வயதாகிறது.. திருமணமாகி கணவனுடன் வசித்த வந்த நிலையில், இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.. எனவே, 13 வருடங்களுக்கு முன்பு தம்பதி இருவருமே, புவனேஷ்வரில் பிறந்து 3 நாட்களான ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தனர்.


செல்லமாக வளர்த்த குழந்தை

அந்த குழந்தைதான் உலகம் என்று இருவருமே செல்லமாக வளர்க்க துவங்கினர். ஆனால், குழந்தையை தத்தெடுத்த அதே வருடத்தில், அந்த கணவர் இறந்துவிட்டார்.. எனவே, அப்பெண் குழந்தையை ராஜேஸ்வரி மட்டும் வளர்த்து வந்தார்.. தன்னுடைய குழந்தையை கேந்திரிய வித்யாலயாவில் படிக்க வேண்டும் என்பதற்காகவே, பராலகேமுண்டிக்கு குடிபெயர்ந்து வந்தார்.. அதே பகுதியில் ஒரு வாடகை வீடு எடுத்து இருவரும் தங்கி வந்துள்ளனர்.

இந்த நிலையில், அந்த சிறுமிக்கு கணேஷ் ரத் (வயது 21), மற்றும் தினேஷ் சாஹு (20) என்ற 2 ஆண் நபர்களுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.. இதில் கணேஷ் ரத் என்பவர் கோயில் பூசாரி ஆவார்.

பிரெயின்வாஷ் பூசாரி

2 ஆண்களுடன் மகளுக்கு தொடர்பு குறித்து விஷயம் ராஜலட்சுமிக்கு தெரிந்து சிறுமியை கண்டித்து, அறிவுறுத்தியிருக்கிறார்.. அந்த அட்வைஸ் சிறுமிக்கு எரிச்சலையும், ஆத்திரத்தையும் தந்தது.. அதேபோல, ராஜலட்சுமியின் சொத்துக்களை அபகரித்துவிடலாம் என்று பூசாரி கணேஷ் ரத்தின் எண்ணமாக இருந்து வந்தது.. எனவே சிறுமியிடம், ராஜலட்சுமியை கொன்றுவிட்டால், ஜாலியாக வாழலாம் என்று பிரெயின்வாஷ் செய்துள்ளார்..
உடனே சிறுமியும், தூக்க மாத்திரை கலந்து கொடுத்து அம்மாவை கொலை செய்ய முடிவு செய்தார்.. அதன்படியே சம்பவத்தன்று அம்மாவுக்கு தூக்க மாத்திரையை கலந்து குடிக்க செய்தார்.. இதில் உடனே ராஜலட்சுமி தூங்கிவிட்டார்.. அப்போது அவரை தலையணையை வைத்து கொன்றுவிட்டார் 13 வயது வளர்ப்பு மகள்..

ஹார்ட் அட்டாக்

பிறகு, தன்னுடைய அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை, மயங்கி விழுந்துவிட்டார் என்று பதறியடித்து கொண்டு, மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்.. அங்கு ராஜலட்சுமியின் உடலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள். உடனே 13 வயது சிறுமி, தன்னுடைய உறவினர்களுக்கு போன் செய்து, அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டாக கூறியிருக்கிறார்.. ராஜலட்சுமிக்கு ஏற்கனவே ஹார்ட் பிரச்சனை இருந்ததால், சிறுமி சொன்னதை அத்தனை பேரும் நம்பிவிட்டார்கள்..

இந்த கொலை திட்டமிட்டபடி நடந்துவிட்டதால், சிறுமியும், 2 ஆண் நண்பர்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.. ஆனால், சிறுமி ஊரைவிட்டு கிளம்பியபோது தன்னுடைய செல்போனை புவனேஷ்வரிலேயே விட்டு சென்றுவிட்டார்.. இந்த செல்போனை ராஜலட்சுமியின் சகோதரர் எதேச்சையாக ஓபன் செய்து பார்த்திருக்கிறார்..

அதிர வைத்த உரையாடல்

அப்போதுதான், இன்ஸ்டாகிராமில் பூசாரி கணேஷூடன் சிறுமியின் ஆடியோ இருந்ததை பார்த்தார்.. அதில், ராஜலட்சுமியை எப்படி கொலை செய்வது என்பது குறித்து இருவரும் டிஸ்கஸ் செய்திருந்தது பதிவாகியிருந்தது..

இந்த உரையாடலை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜலட்சுமியின் சகோதரர் போலீசுக்கு ஓடினார்.. அப்போதுதான், 13 வயது சிறுமிக்கு 2 ஆண் நண்பர்கள் இருப்பது தெரியவந்தது.. இதையடுத்து, 3 பேரையுமே போலீசார் கைது செய்தனர்.. அவர்களிடமிருந்து 30 கிராம் தங்க நகைகளும், 3 செல்போனையும் பறிமுதல் செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+