தனிமையில் ஜோடி.. கிட்ட நெருங்கிய மக்கள்.. அடுத்தடுத்து நடந்த சம்பவம்.. எகிறி தப்பிய நபரால் ட்விஸ்ட்
கான்பூர்: உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்கு புறம்பாக காதலுடன் பேசிக்கொண்டிருந்தபோது கையும் களவுமாக பிடிப்பட்ட பெண்ணை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
வடமாநிலங்களில் எவ்வளவுதான் போலீசார்கள் விழிப்பாக இருந்தாலும், ஊர் பஞ்சாயத்துக்களை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை.

குடும்ப பிரச்சனைகளாக இருந்தாலும், ஊர் பஞ்சாயத்தினரிடமே விவகாரம் செல்கிறது.. அந்தவகையில், நிறைய கிராமங்களில் பஞ்சாயத்துக்கள் கூடி தீர்ப்புகள் சொல்லப்பட்டு வருகின்றன.. இந்த தீர்ப்புகள் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும்கூட, அந்த தீர்ப்புகளுக்கு அந்தந்த கிராம மக்கள் அப்படியே கட்டுப்படுகிறார்கள்.
குடும்ப விவகாரம்: அந்தவகையில், மீண்டும் உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. அங்குள்ள பிரதாப்கரின் சோட்கி இப்ராஹிம்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. இவருடைய கணவர், மும்பையில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு குழந்தைகளும் இருக்கிறார்கள்.. இதனால், சொந்த கிராமத்திலேயே இந்த பெண் வசித்து வருகிறார்.
இதனிடையே, அதே கிராமத்தை சேர்ந்த இளைஞருடன் கள்ள உறவில் இருந்துள்ளதாக தெரிகிறது.. இந்த விவகாரம் அந்த கிராமத்தினருக்கும் தெரிந்துவிட்டது.. எனவே, அனைவரும் சேர்ந்து அந்த பெண்ணை எச்சரித்திருக்கிறார்கள்.. எனினும், இளைஞருடனான உறவு தொடர்ந்திருக்கிறது..
கொந்தளிப்பு: இந்நிலையில் சம்பவத்தன்று, அந்த பெண் தன்னுடைய காதலனிடம் பேசிக்கொண்டிருந்தார்.. அப்போது இதைப்பார்த்து ஊர் மக்கள் கொந்தளித்து விட்டார்கள். பலமுறை எச்சரித்தும் மீண்டும், இளைஞரிடம் பேசுவதா? என்று ஆவேசம் அடைந்து, அந்த ஜோடியை பிடிக்க முயன்றனர்.. ஆனால், அந்த இளைஞர் எகிறி தப்பி ஓடிவிட்டார்.. இளம்பெண் மட்டும் கிராமத்தினரிடம் வசமாக சிக்கி கொண்டார்..
இதையடுத்து, அந்த பெண்ணை அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்து அனைவரும் சேர்ந்து அடித்திருக்கிறார்கள்.. குழந்தைகள் கண்முன்னேயே மரத்தில் கட்டிவைத்து செருப்பு மாலை அணிவித்திருக்கிறார்கள்.. பெண்ணுக்கு முகத்தில் கருப்பு மை பூசி, தலைமுடியை வெட்டியிருக்கிறார்கள்.. பிறகு, ஒட்டுமொத்தமாக சேர்ந்து கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.
வீடியோ: இந்த கொடுமையை அங்கிருந்த நபர்களே வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிட்டனர்.. இதைப்பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இதனிடையே, ஊர் மக்களிடமிருந்து தப்பித்து ஓடிய இளைஞர், நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுவிட்டார்.. ஒட்டுமொத்த கிராமத்தினர் மீதும் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளம்பெண்ணை மீட்டனர்... இந்த சம்பவம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.. அத்துடன் விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.. பாதுகாப்பு கருதி கிராமத்தில் போலீசார் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணை: இளம்பெண்ணை மரத்தில் கட்டிவைத்து செருப்பு மாலை அணிவித்து, தலைமுடியையும் வெட்டி, கடுமையாக தாக்கிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது












Click it and Unblock the Notifications