மனைவியின் "மேக்கப்".. இப்படி நடக்குமா? ஒத்தரோசா, புள்ளைய ரொம்ப நல்லா வளர்த்துக்கேம்மா.. அழும் கணவன்
கான்பூர்: வர வர விவாகரத்து வழக்குகளுக்கு மதிப்பே இல்லாமல் போய்விடுகிறது.. எது எதுக்கு டைவர்ஸ் செய்றதுன்னே விவஸ்தை இல்லாமல் போய்விட்டது.. உத்தரபிரதேசத்தில் நடந்த ஒரு கூத்தை பாருங்க.
சில மாதங்களுக்கு முன்பு உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் மால்புரா என்ற பகுதியில் ஒரு விநோத சம்பவம் நடந்தது.. அண்ணன் - தம்பி 2 பேருக்குமே ஒருவர் மீது ஒருவருக்கு அலாதி பிரியம்.

சகோதர பாசம்: எனினும், தங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டால், வரப்போகும் மனைவிகள், தங்களை பிரித்துவிடுவார்களோ? என்று அண்ணன் - தம்பி இருவருமே பயந்தார்கள். அதனால், ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, அக்கா - தங்கையாக உள்ள பெண்களை தேடி இருவருமே கல்யாணம் செய்து கொண்டார்கள்.
அண்ணன் தம்பி, அக்கா தங்கை என 4 பேருமே ஒரே வீட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை துவங்கினர்... சில நாட்களில் வீட்டில் தகராறு "மேக்கப்" மூலமாக வெடித்தது. மூத்த மருமகளின் மேக்கப் பொருட்களை, மாமியார் பயன்படுத்தி வந்துள்ளார்.. அதுமட்டுமல்ல, மூத்த மருமகளின் மார்டன் டிரஸ்ஸையும், யாருக்கும் தெரியாமல் மாமியார் அணிந்துகொள்வாராம்.
மாமியார் மேக்கப்: ஃபுல் மேக்கப் போட்டுக் கொண்டு, வெளியில் எங்கேயுமே மாமியார் போக மாட்டாராம்.. தன்னுடைய ரூமுக்குள்ளேயே இந்த மேக்கப் கோலத்தில் நடமாடி வந்துள்ளார். இந்த விஷயம் மூத்த மருமகளுக்கு தெரிந்து, கணவனிடம் புகார் சொல்லி உள்ளார்.
இதைக்கேட்ட கணவர், அம்மாவுக்கு சப்போர்ட் செய்ததுடன், மனைவியையும் கண்மூடித்தனமாக தாக்கிவிட்டாராம்.. இதனால் ஆத்திரமடைந்த அக்கா - தங்கை இருவருமே, "அம்மா பேச்சை கேட்கும் கணவன்கள் தங்களுக்கு தேவையில்லை" என்று சொல்லி, கோர்ட் வரை டைவர்ஸ் கேட்டு சென்றுவிட்டார்கள்.
2 மருமகள்கள், 2 மகன்கள் மற்றும் மேக்கப் மாமியாரை கவுன்சிலிங்குக்கு கோர்ட்டில் அழைத்திருந்தனர். அதுக்கு பிறகு, அந்த மருமகள்களுக்கு டைவர்ஸ் கிடைத்ததா? அந்த கேஸ் என்ன ஆனது என்றே தெரியவில்லை.
இதோ இப்போதும் ஒரு பெண், டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு போயிருக்கிறார்.. இந்த சம்பவமும் உத்தரபிரதேச மாநிலத்தில்தான் நடந்துள்ளது... இந்த இளம் மனைவி எப்போதுமே நிறைய மேக்கப் போட்டுக் கொள்வாராம்.
மேக்கப்: அப்படித்தான், சம்பவத்தன்று மேக்கப் போட தயாராகி உள்ளார். அப்போது லிப்ஸ்டிக் காலியாகிவிட்டதால், தன்னுடைய கணவனை அழைத்து, 10 ரூபாய் லிப்ஸ்டிக்கை வாங்கி வரும்படி சொல்லி உள்ளார்.
கணவனும் ரூ.10 லிப்ஸ்ட்டிக் வாங்க கடைக்கு போனார்.. ஆனால், நிறைய கடைகளில் தேடிப்பார்த்தும்கூட, 10 ரூபாய் லிப்ஸ்டிக் கிடைக்கவில்லை.. 30 ரூபாய் லிப்ஸ்டிக் தான் கடைகளில் இருந்துள்ளது. அதனால், ரூ.10 லிப்ஸ்டிக்கிற்கு பதிலாக ரூ.30 மதிப்புள்ள லிப்ஸ்டிக்கை வாங்கி வந்து மனைவியிடம் தந்துள்ளார்.
லிப்ஸ்டிக்: அந்த லிப்ஸ்டிக்கை பார்த்ததுமே, மனைவி ஆவேசமடைந்தார்.. நான் கேட்டது 10 ரூபாய் லிப்ஸ்டிக் தான்.. 30 ரூபாய் லிப்ஸ்டிக்கை நான் கேட்கவேயில்லையே? நான் கேட்காத ஒன்றை ஏன் வாங்கி வந்தீங்க? என்று சண்டை போட்டுள்ளார். கணவன் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அந்த பெண் சமாதானம் ஆகவில்லை.
இந்த தகராறு, வாக்குவாதமாக வெடித்து, பெரிய தகராறாகிவிட்டது.. கடைசியில், கோபித்துக் கொண்டு, அம்மா வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டார் அந்த பெண்... ஆத்திரத்தில் இப்படி நடந்துவிட்டதால், கோபம் தணிந்து மனைவி மனம்திரும்பி வீட்டுக்கு வருவார் என்று நம்பிக் காத்துக் கொண்டிருந்தார் கணவர்.. ஆனால், அந்த பெண், விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பிவிட்டாராம்..
வீட்டு செலவு: அதில் அப்பெண் சொல்லியிருக்கும் காரணம் என்ன தெரியுமா? கணவருக்கு சேமிக்கும் பழக்கம் இல்லையாம்.. பணம் பற்றின அக்கறை இல்லையாம்.. வீட்டு செலவு குறித்த பயமும் இல்லையாம். இப்படி பொறுப்பில்லாத கணவனை விவாகரத்து செய்ய விரும்புவதாக கூறியிருக்கிறார்..
இந்த விவாகரத்து வழக்கை பார்த்து அதிர்ந்த நீதிமன்றம், இவர்களை சமாதானப்படுத்தும் நோக்கத்தில் கவுன்சிலிங்கிற்கு செல்லும்படி அறிவுறுத்தியிருக்கிறதாம்.. என்னத்த செய்றது????












Click it and Unblock the Notifications