ஒட்டுத்துணி கூட இல்லாமல், "அந்த" கோலத்தில் திரியும் இளம்பெண்கள்.. அதுவும் 5 நாளைக்கு.. நம்ம ஊர்லதான்
சிம்லா: இளம் பெண்கள் நிர்வாணமாக நடமாடும் கிராமம் ஒன்று இருக்கிறது தெரியுமா? நம்ம நாட்டிலேயே உள்ளது.. இந்த இடம் எங்கே உள்ளது? இதற்கு என்ன பின்னணி?
இந்தியாவின் ஒருசில கிராமப்புறப்பகுதிகளில், இன்றுவரை பழமையான மரபுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.. இவைகளில் சில விநோதமானவை.. சில விசித்திரமானவை.. சில அதிர்ச்சி தரக்கூடியவை.. சில ஜீரணிக்கவே முடியாதவை. எனினும், அந்தந்த பகுதிகளில், இன்றுவரை இப்படியான நடைமுறைகளை, தங்களுக்குள் கடைப்பிடித்தே வருகிறார்கள்.

விசித்திரம்: இப்படியான சடங்குகளுக்கு பின்னணியில், வலுவான, அழுத்தமான, உணர்வுப்பூர்வமான கதைகளும், காரணங்களும் பின்னிப்பிணைந்தே வருகின்றன. அப்படித்தான் நம்முடைய இமாச்சல பிரதேசத்திலும் ஒரு வினோத பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கும் ஒரு கதை இருக்கிறது. அதன் சுருக்கத்தை பார்ப்போம்:
இமாச்சலப்பிரதேச மணிகர்ணா பள்ளத்தாக்கில் உள்ளது பினி என்ற கிராமம்.. இந்த கிராமத்தில் மொத்தம் 130 குடும்பங்கள் வசிக்கின்றன. 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பினி கிராமத்தில் 651 பேர் உள்ளனர். இதில் 316 பேர் ஆண்கள், 335 பேர் பெண்கள் ஆவர்.
பேய், பிசாசு: முன்னொரு காலத்தில், இந்த கிராமத்தில், நிறைய பேய்களும், பிசாசுகளும் இருந்ததாம்.. அரக்கர்களும் இங்கு அலைந்து திரிந்ததாக சொல்லப்படுகிறது.. இந்த கிராமத்தில், பெண்கள் யாராவது அழகாய் டிரஸ் பண்ணியிருந்தால், அந்த பேய்கள் வந்து தூக்கி கொண்டு போய்விடுமாம்.
அதேபோல, கல்யாணமான பெண்களையும் விட்டுவைக்காது.. அவர்களையும் லபக்கென தூக்கி சென்றுவிடுமாம் பேய்கள். பெண்களை, இப்படி ஒவ்வொருவராக பேய்கள் கவர்ந்து செல்வதை, லாஹு கோண்ட் என்ற தெய்வம் முன்வந்து தடுத்துள்ளது.. அந்த கிராமத்து பெண்களையும், பேய்களிடமிருந்து காப்பாற்றியுள்ளது.
ஆடைகள் கிடையாது: லாஹு கோண்ட் தெய்வம், பேய்களை அழித்த சம்பவத்தை நினைவு கூர்வதற்காகத்தான், சாவான் மாதத்தில் திருவிழா கொண்டாடுகிறார்கள்.. இது மழை காலங்களில் கொண்டாடப்படும் விழாவாகும்.. மொத்தம் 5 நாட்களுக்கு தொடர்ந்து கொண்டாடுவார்கள். இந்த 5 நாட்களுமே, இந்த கிராமத்தில் உள்ள பெண்கள் ஆடைகளை அணிய மாட்டார்களாம்..
நூற்றாண்டுக்ளுக்கும் மேலாக இப்படித்தான் மக்கள் இருந்து வந்துள்ளனர்.. ஆனால், காலப்போக்கில் இளம் பெண்கள் மட்டும், ஒரே ஒரு டிரஸ்ஸை உடுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். கம்பளியால் செய்யப்பட்ட பட்காவை அந்த நேரத்தில் சுற்றிக்கொள்கிறார்கள்.. இளம் பெண்களுக்கு மட்டும்தான் இந்த விலக்கே தவிர, வயதானவர்களுக்கு கிடையாது.. அவர்கள் எல்லாம் நிர்வாணமாகவே இருக்கின்றனர்.

துர்சம்பவங்கள்: இளம்பெண்கள் யாராவது இந்த விதியை, மீறினால், அவர்களுக்கு உடனே கெட்ட சம்பவங்கள் நடந்துவிடுகிறதாம். அதனால்தான், அதற்கு பயந்துகொண்டு பெண்கள், இந்த விதிமுறைகளை இப்போதுவரை கடைப்பிடித்து வருகிறார்கள். இன்றைய சூழலிலும், பெண்கள் நிர்வாணமாக இருக்கிறார்கள் என்றாலும், இந்த குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் வீட்டிற்குள்ளேயே பூட்டிக்கொண்டு இருக்கிறார்கள். யாரும் வெளியே வருவது கிடையாது. ஆண்கள் முன்பு தோன்றவும் கூடாது.
பெண்கள் இப்படி வேண்டுதலில் உள்ளதால், ஆண்களுக்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளது.. அதன்படி, இந்த 5 நாட்களில் ஆண்கள் யாரும் தண்ணி அடிக்கக்கூடாது.. கறி, மீன் சாப்பிடக்கூடாது.. இந்த 5 நாட்களும் கணவன் மனைவி ஒன்றாக இருக்கக்கூடாது.. சிரித்து பேசக்கூடாது என்றெல்லாம் கண்டிஷன்கள் உள்ளது.
மூடநம்பிக்கையா?: அதையும் மீறி யாராவது, சிரித்து பேசிக்கொண்டிருந்தால், உடனே வந்து அந்த பேய் தூக்கி கொண்டு போய்விடுமாம்.. இதற்கு பயந்துகொண்டு, இன்னமும் நிர்வாணமாகவே பெண்கள் திரிகிறார்களாம்.. பேய்க்கு ஒருபக்கம் கோபம் வருகிறது என்றாலும், இத்தகைய வினோத பழக்கம், மூடநம்பிக்கையின் உச்சம் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்..!!!












Click it and Unblock the Notifications