Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அஸ்ஸாமில் சென்னை பெண் கொலை.. ராணுவ கர்னலை காட்டிக் கொடுத்த முக்கிய ஆதாரம்! துப்பு துலங்கியது எப்படி?

அஸ்ஸாமில் சென்னை பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சுவாமி டாலர் மூலம் ராணுவ அதிகாரி சிக்கினார்.

Subscribe to Oneindia Tamil

குவாஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் சென்னை பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ராணுவ அதிகாரி சிக்கியதற்கு முக்கிய துப்பு கிடைத்தது எப்படி தெரியுமா?

அஸ்ஸாமின் காம்ரூப் மாவட்டத்தில் உள்ள சாங்கரி பகுதியில் சாலையோரம் ஒரு மூட்டையில் பெண்ணின் சடலம் காணப்பட்டது. அந்த உடல் பிளாஸ்டிக் பையில் போட்டு சாலையோரத்தில் வீசப்பட்டிருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த பெண் யார், எப்படி கொலை செய்யப்பட்டார், யார் இவரை கொலை செய்தது உள்ளிட்ட கோணங்களில் எல்லாம் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

விசாரணை

விசாரணை

இந்த நிலையில் விசாரணையில் அந்த பெண் தமிழகத்தை சேர்ந்த 36 வயது பெண் என்பது தெரிவந்தது. இதையடுத்து காம்ரூப் போலீஸார் அந்த பெண்ணின் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பரப்பி விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அந்த பெண்ணின் கழுத்தில் லிங்க பைரவி டாலர் அணிந்திருந்தார். அந்த டாலர் எங்கு வாங்கப்பட்டது என்பதை விசாரித்தனர். அது கோவை பகுதியில் உள்ள பைரவர் கோயிலில் வழங்கப்படும் டாலர் என தெரியவந்தது.

கோயில் நிர்வாகம்

கோயில் நிர்வாகம்

இதையடுத்து கோயில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு டாலர் வாங்கிய நபர்கள் குறித்த தகவலை அஸ்ஸாம் போலீஸார் சேகரித்தனர். மேலும் அந்த கோயிலின் சிசிடிவி காட்சிகளையும் வாங்கியுள்ளனர். அதன்படி கோயிலில் டாலரை பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்ற போலீஸார் போன் செய்துள்ளனர். அப்போது சென்னையில் உள்ள வயதான தம்பதிக்கு போன் செய்துள்ளனர்.

வாரணாசி

வாரணாசி

அப்போதுதான் அவர்களின் மகள் வாரணாசிக்கு செல்வதாக கூறியதாகவும் தங்கள் 4 வயது பேத்தியையும் அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தனர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் இல்லை என கூறினர். பின்னர் அந்த பெண்ணின் புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டனர். அதை சடலத்துடன் ஒப்பிட்டு பார்த்தனர்.

சென்னை பெண்

சென்னை பெண்

அதை வைத்துதான் போலீஸார் அந்த பெண் சென்னையைச் சேர்ந்தவர் என கண்டறிந்தனர். இதையடுத்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணை பெற்று ஆய்வு செய்ததில் அந்த பெண் ராணுவ லெப்டினன்ட் கர்னல் ஒருவருடன் பேசி வந்ததும் தெரியவந்தது. அந்த பெண் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக அந்த பெண், கர்னலின் செல்போன் எண் ஒரே இடத்தில் இருந்தது தெரியவந்தது.

பஞ்சாப் கர்னல் கைது

பஞ்சாப் கர்னல் கைது

இதையடுத்து தேஜ்பூரில் உள்ள தலைமையகத்தில் இருந்து பஞ்சாபை சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் அமரீந்தர் சிங் வாலியாவை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது சாங்சாரி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். லெப்டினன்ட் கர்னல் வாலியா ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையில் அந்த பெண்ணுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. கணவரை பிரிந்த அவர் ஜீவனாம்சம் கேட்டு சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பின்னணி என்ன

பின்னணி என்ன

இந்த நிலையில்தான் பேஸ்புக் மூலம் அந்த பெண்ணுக்கு கர்னல் வாலியாவுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காதலாக மாறியது, இதனால் தனிமையில் அவ்வப்போது கர்னலும் அந்த பெண்ணும் சந்தித்து காதலை வளர்த்துள்ளனர். இந்த நிலையில்தான் வாரணாசியில் உள்ள கோயிலுக்கு செல்வதாக கூறி கடந்த ஜனவரி 31 ஆம் தேதி அந்த பெண் தனது 4 வயது குழந்தையுடன் அஸ்ஸாம் தலைநகர் குவாஹாத்தியில் உள்ள ராணுவ லெப்டினன்ட் கர்னல் அமரேந்தர் சிங்கை சந்தித்துள்ளார்.

கொலை

கொலை

இருவரும் ஒரு சொகுசு ஹோட்டலில் தங்கியுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி அந்த பெண்ணுக்கும் கர்னலுக்கும் இடையே திருமணம் குறித்து பேச்சு எழுந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே சண்டை வந்தது. இதில் ஆத்திரமடைந்த வாலியா தனது கையில் இருந்த காப்பால் அந்த பெண்ணின் கழுத்தை பார்த்து ஓங்கி குத்தியுள்ளார். இதில் கழுத்து எலும்பு உடைந்து அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பிளாஸ்டிக் கவரில் டிஸ்போஸ்

பிளாஸ்டிக் கவரில் டிஸ்போஸ்

இதையடுத்து கொலையை மறைக்க பிளாஸ்டிக் கவரில் சுற்றி அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்தி அருகே உள்ள காம்ரூப் வனப்பகுதியில் உடலை போட்டுவிட்டு அங்கிருந்த தப்பி வந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் ஹோட்டலில் இருந்த அந்த பெண்ணின் குழந்தையை காரில் அழைத்து சென்று கொல்கத்தா ரயில் நிலையத்தில் விட்டுவிட்டுச் சென்றதும் தெரியவந்தது.

குழந்தையை மீட்ட தாத்தா பாட்டி

குழந்தையை மீட்ட தாத்தா பாட்டி

இதையடுத்து குழந்தை நீண்ட நேரமாக அழுது கொண்டிருந்ததை பார்த்து அங்குள்ள குழந்தைகள் நல அமைப்புகள் குழந்தையை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோரை அஸ்ஸாமுக்கு வரவழைத்த போலீஸார் அந்த பெண்ணுக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை செய்துள்ளனர். இதையடுத்து தங்களது பேத்தியையும் கொல்கத்தாவில் உள்ள காப்பகத்தில் இருந்து மீட்டனர். கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவரை ராணுவ கர்னல் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+