"எங்களுக்கு சிறையில் இருப்பவர் உதவி வேண்டாம்" - மோடியின் பேச்சால் பரபரப்பு
ஹிசார்: "சிறையில் இருப்பவர் உதவி பாஜகவுக்கு வேண்டாம்.. அதை நாங்கள் விரும்பவில்லை" என்று ஹரியானா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநில சட்டசபைக்கு வரும் 15-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அம்மாநிலத்தின் ஹிசார் பகுதியில் இன்று பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது மோடி பேசியதாவது:
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்த ஹரியானா வீரர்களை மனதார பாராட்டுகிறேன்.

மத்தியில் எங்கள் அரசு மக்கள் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. சிலர் சிறையில் இருந்தபடியே ஹரியானா அரசை நடத்தி விடலாம் என கனவு காண்கின்றனர்.
ஹரியானா மாநில வாக்காளர்கள் அப்படியானவர்களுக்காக வாக்களிப்பார்கள்? தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் ஆதரவு எங்களுக்கு தேவையில்லை.
கல்வியறிவு, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியாவிலேயே பின் தங்கிய மாநிலங்களில் முதல் மாநிலமாக இருக்கிறது ஹரியானா.
இதுவரையிலான ஹரியானா அரசுகளால் இந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. நீங்கள் மாற்றத்தை விரும்பினால் எங்களுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
சவுதாலா
ஹரியானாவின் இந்திய தேசிய லோக்தள் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா, ஆசிரியர் தேர்வு முறைகேடு ஊழலில் 10 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். சவுதாலவின் லோக் தள் ஆதரவு தங்களுக்கு தேவையில்லை என்பதைக் குறிப்பிடும் வகையிலேயே "சிறையில் இருப்பவர்கள்" ஆதரவு எங்களுக்கு தேவையில்லை என்று மோடி பேசியுள்ளார்.
இருப்பினும் தற்போது அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவும் சிறையில் இருப்பதால் மோடியின் பேச்சு அவரையும் மறைமுகமாக குறிக்கிறதோ என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications