டெல்லியில் கத்தை கத்தையாக 100 ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய டாக்டர்
டெல்லி: டெல்லியில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 100 ரூபாய் நோட்டுக் கட்டுகளை காரில் ஏற்றிய குழந்தைகள் நல டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததால் மக்கள் செலவுக்கு சில்லரை இல்லாமல் அல்லாடுகிறார்கள். 100, 50 ரூபாய் நோட்டுகளை பார்த்தால் மக்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பஹர்கஞ்ச் பகுதியில் டாக்டர் நல்லல் என்பவர் கட்டுக் கட்டாக 100 ரூபாய் நோட்டுகளை தனது காரில் ஏற்றிக் கொண்டிருந்திருக்கிறார்.
டாக்டர் கட்டுக் கட்டாக பணத்தை காரில் வைப்பதை பார்த்த அந்த வழியாக சென்ற நபர் உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவல் கொடுத்தார்.
தகவல் கிடைத்தவுடன் போலீசார் வந்து நல்லலை கைது செய்ததுடன் அவர் வைத்திருந்த பணக் கட்டுகளை பறிமுதல் செய்தனர். டாக்டரிடம் இருந்து ரூ. 69 லட்சத்து 86 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தனது தொழில் அதிபர் நண்பர் ஒருவர் பணத்தை தந்ததாகவும், அதை ரஜோரி கார்டனில் உள்ள தனது வீட்டிற்கு எடுத்துச் செல்ல காரில் வைத்ததாகவும் டாக்டர் விசாரணையில் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் வருமான வரித்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications