பெருத்துக் கொண்டே போனதால்.... 2.75 கிலோ சிறுநீரகத்தை அகற்றி டெல்லி மருத்துவர்கள் சாதனை!
டெல்லி: டெல்லியில் நோயாளியின் உடலில் இருந்து பழுதடைந்த 2.75 கிலோ சிறுநீரகத்தை அகற்றி டெல்லி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த ஒருவர் நீண்ட நாட்களாக அடிவயிற்றுப் பகுதியில் தீராத வலியுடன் அவதிப்பட்டு வந்தார். நாளடைவில் சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேற தொடங்கியது. இதனையடுத்து, இதனையடுத்து அந்த நபர் கடந்த மாதம் டாக்டரிடம் சென்றார்.

அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனைகளில் சிறுநீரக வீக்க நோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. சிறுநீரில் கலந்து வெளியேறும் அதிக ரத்தப்போக்கால் நோயாளியின் நிலைமை நாளுக்குநாள் மோசமானது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட இரு சிறுநீரகங்களை அகற்றிவிட்டு மாற்று சிறுநீரகம் பொருத்தினால்தான் உயிர் பிழைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
நோயாளி குடும்பத்தை சேர்ந்த ஒருவர் சிறுநீரக தானம் வழங்க முன்வந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு ஆபரேஷன் செய்த டாக்டர்கள் முதலில் 2.75 கிலோ எடை கொண்ட அவரது ஒரு சிறுநீரகத்தை அகற்றி, வெற்றிகரமாக மாற்று சிறுநீரகத்தை பொருத்தினர். இதனையடுத்த ஒரு வாரத்தில் 2.5 கிலோ எடை கொண்ட அவரது பழுதடைந்த மற்றொரு சிறுநீரகமும் அகற்றப்பட்டது.
சராசரியாக ஒரு மனிதனின் சிறுநீரகம் 130 கிராம் எடை கொண்டதாக இருக்கும்பட்சத்தில் இவரது சிறுநீரகம் அதைவிட 20 மடங்கு அதிக எடை கொண்டதாக இருந்ததால் இந்த ஆபரேஷன் சற்று சிக்கலானதாக இருந்தது.
ஆனால், டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனை டாக்டர்கள் இந்த சிக்கலான அறுவைசிகிச்சையை செய்து உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுநீரகத்தை அகற்றிய மருத்துவர்கள்என்ற உலக சாதனையை படைத்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications