மாநிலங்களுக்கு தந்த நிதி உங்கள் மாமா வீட்டில் இருந்தா வந்தது? ராகுல் மீது மோடி தாக்கு
ராய்ப்பூர்: மத்திய அரசால் மாநிலங்களுக்கு தரப்பட்ட நிதி உங்கள் மாமா வீட்டில் இருந்து வந்ததா என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கான 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தின் போது மோடி பேசியதாவது:
ஊழலில் காங்கிரஸ் கட்சி டாக்டர் பட்டம் பெற்று உள்ளது. காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு சுமை ஆகிவிட்டது. எனவே காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும்.

காங்கிரஸ் கட்சி, தேர்தல் கருத்துக்கணிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. அடுத்த ஆண்டில் நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கப் போகிறது. தேர்தலில் தோற்று விடுவோம் என்பதால்தான் கருத்துக்கணிப்புகளுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.
சோனியா அம்மையாரும், இளவரசர் ராகுலும் இங்கே வந்தனர். இந்த மாநிலத்துக்கு ஏராளமான உணவு தானியங்களும், நிதியும் கொடுக்கப்பட்டதாக கூறினார்கள். மக்களே, நீங்கள் என்ன பிச்சைப் பாத்திரம் ஏந்திக்கொண்டா நிற்கிறீர்கள்? காங்கிரஸ் என்ன பேசிக்கொண்டிருக்கிறது?
நான் இளவரசர் ராகுலை கேட்க விரும்புகிறேன். மாநிலங்களுக்கு நீங்கள் நிறைய நிதி கொடுத்தோம் என கூறி வருகிறீர்கள். இந்தப் பணம் என்ன உங்கள் மாமா வீட்டில் இருந்தா வந்தது? இது மக்களின் பணம் அல்லவா?
சோனியா அம்மையாரே, உங்களுக்கு உடல் நலமில்லை. கட்சியை இளவரசர் ராகுலிடம் ஒப்படைத்து விடுங்களேன் என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications