பக்கத்து வீட்டு பூந்தொட்டியில் சிறுநீர் கழித்த நாய்...சரமாரியாக அடி வாங்கிய நாயின் உரிமையாளர் !
டெல்லி: டெல்லியில் வளர்ப்பு நாய் பக்கத்து வீட்டு பூந்தொட்டியில் சிறுநீர் கழித்ததால், அந்த நாயின் உரிமையாளருக்கு சராமரி அடி உதை விழுந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு டெல்லி கல்யான்புரி பகுதியில் வசித்து வருபவர் ரமணி சவுத்ரி. இவரது மகன் தேவேஷ் தினந்தோறும் நாயை வாக்கிங் அழைத்து செல்வது வழக்கம். அதேபோல் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு தனது நாயை வெளியே வாக்கிங் அழைத்துச் சென்றார்.

அப்போது அந்த நாய் ரமணி வீட்டின் அருகில் உள்ள ப்ரிஜ் லால் என்பவரது வீட்டுமுன் வைத்திருந்த பூந்தொட்டி மீது சிறுநீர் கழித்தது. இதனால் ப்ரிஜ் லால் மகன் மணிஷ், தேவேஷ் உடன் தகராறு செய்தார்.இந்த தகராறு பின்னர் கைகலப்பாக மாறியது.
மணிஷ், அவரது சசோதரரர் அனுஜ் மற்றும் தந்தை ஆகியோர் தேவேஷை தாக்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் ரமணியையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ரமணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாய் சிறுநீர் கழித்த விவகாரத்திற்கான இரு குடும்பத்திற்கிடையே சண்டை ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மணிஷை கைது செய்துள்ளனர். தப்பியோடிய அவரது சசோதரர் மற்றும் தந்தை ஆகியோரை தேடி வருகிறார்கள்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications