வேலைக்கார பெண் மர்ம மரணம்- பகுஜன் எம்.பி.யின் மனைவி கைது
டெல்லி: வேலைக்கார பெண் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தனஞ்செய்சிங்கின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தனஞ்செய்சிங் எம்.பி, டெல்லி சாணக்யபுரி பகுதியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் கடந்த 10 மாதங்களாக பணிபுரிந்த இளம்பெண் தலை மற்றும் வயிறு பகுதிகளில் கடுமையான காயங்களுடன் நேற்று காலை உயிரிழந்திருக்கிறார்.
இது தொடர்பாக நேற்று இரவுதான் அப்பெண்ணின் உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்திருக்கின்றனர். அப்பெண் கூரிய ஆயுதங்களால் கடுமையான சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக தனஞ்செய்சிங்கின் மனைவி ஜக்ரிதி சிங் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தனஞ்செய்சிங் எம்.பி, 3 நாட்களுக்கு முன்பு என் மனைவி போனில் அழைத்தார். வீட்டின் மேற்கூரையில் இருந்து அப்பெண் விழுந்துவிட்டதாக தெரிவித்தார். பின்னர் நேற்று மாலை மீண்டும் என் மனைவி போனில் கூப்பிட்டார்.. அப்பெண் இறந்துவிட்டதாக தெரிவித்தார். நான் என் தொகுதியில் இருந்து உடனே டெல்லிக்கு விரைந்து வந்தேன் என்றார்.
தனஞ்செய்சிங் எம்.பி. வீட்டில் பணிபுரியும் இதர வேலைக்காரர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications