என் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களை தேவையில்லாமல் கைது செய்கிறார்கள்.. நீரவ் மோடி பகீர்
தன் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களை சிபிஐ தேவையில்லாமல் கைது செய்கிறார்கள் என்று நீரவ் மோடி பகீர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
டெல்லி: தன் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களை சிபிஐ தேவையில்லாமல் கைது செய்கிறார்கள் என்று நீரவ் மோடி பகீர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.
இந்த நிலையில் நீரவ் மோடியை மத்திய அரசு தீவிரமாக தேடி வருகிறது. அவர் ஹாங்காங்கில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மெயில் அனுப்பி இருக்கிறது
ஆனாலும் அவர் எங்கே இருக்கிறார் என்று சரியாக தெரியாத காரணத்தால் சிபிஐ தரப்பு அவருக்கு மெயில் அனுப்பி இருக்கிறது. விசாரணை நடக்க இருக்கிறது நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறது. ஆனால் அவர் வேலையில் பிசியாக இருப்பதாக பதில் அளித்தார்.

எட்டு மணிக்கு மேல்
இந்த நிலையில் நீரவ் மோடி நிறுவனத்தில் வேலை செய்யும் முக்கியமான பெண் அதிகாரி ஒருவரை இரண்டு நாட்கள் முன்பு சிபிஐ கைது செய்து இருக்கிறது. பெண்களை 6 மணிக்கு மேல் சில முக்கிய காரணங்களை தவிர வேறு காரணங்களுக்காக கைது செய்ய கூடாது என்று விதி இருக்கிறது. சிபிஐ இந்த விதியை மீறியுள்ளது.

கடிதம் எழுதினார்
இதுகுறித்து நீரவ் மோடி கடிதம் எழுதி இருக்கிறார். சிபிஐக்கு அவர் எழுதிய கடிதத்தில் ''என் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களை தேவையில்லாமல் கைது செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது முழுக்க முழுக்க முறைகேடானது'' என்று கோபமாக குறிப்பிட்டு இருக்கிறார்.

ஹாங்காங்கில் மோடி
இந்த நிலையில் அவர் இருக்கும் இடம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. முதலில் அவர் அமெரிக்காவில் இருக்கிறார் எனப்பட்டது. பின் அவர் மேற்கிந்திய தீவுகளில் இருக்கிறார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அவர் இப்போது ஹாங்காங்கில் இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications