முலாயம்சிங்குடனான உறவு சீர்குலைந்ததற்கு ஜெயா பச்சனே காரணம்: அமர்சிங்
டெல்லி: சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவுடனான உறவு சீர்குலைய ஜெயா பச்சனே காரணம் என்று ராஜ்யசபா எம்.பி. அமர்சிங் கூறியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவின் மிக நெருங்கிய நண்பராக இருந்தவர் அமர்சிங். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முலாயம்சிங் யாதவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமாஜ்வாடி கட்சியில் இருந்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
பின்னர் அஜித்சிங்கின் ராஷ்டிரிய லோக் தள் கட்சியில் அவரும் ஜெயப்பிரதாவும் இணைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக உத்தரப்பிரதேசத்தில் பூங்கா ஒன்றின் திறப்பு விழாவுக்காக அமர்சிங்கை முலாயம்சிங் அழைத்திருந்தார். அமர்சிங்கும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது முதலே அவர் மீண்டும் சமாஜ்வாடி கட்சியில் இணைவார் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள அமர்சிங், முலாயம்சிங் என்னை தொடர்பு கொண்டு எதை செய்ய வேண்டும் என்று சொன்னாலும் நான் செய்வேன். எனக்கும் அவருக்கும் இடையே ஜெயா பச்சன் தூதராக செயல்பட்டதில் இருந்தே பிரச்சனை வரத் தொடங்கிவிட்டது. அவரால்தான் பிரச்சனையே வந்தது.
எனக்கும் முலாயம்சிங் யாதவுக்குமான உறவை சீர்படுத்த ஜெயாபச்சன் ஒன்றும் புரோக்கராக செயல்பட தேவையில்லை. முலாயம்சிங் யாதவுடன் இணைந்து சமூக சேவைக்காகத்தான் லக்னோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சியை அரசியலாக்க வேண்டாம் என்றார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications