"திரௌபதி முர்மூவுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிக வெற்றி வாய்ப்பு" - மமதா பானர்ஜி
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குடியரசு தலைவர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்ட திரௌபதி முர்மூவுக்கு புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் 20 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
அதோடு, அவருக்கு குடியரசு தலைவர் தேர்தலில் அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மூ தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று தனக்கான ஆதரவைக் கோரி வருகிறார். இதனிடையே புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டிற்கு வருகை தரும் திரெளபதி முர்மூ, முதல் கட்ட பயணமாகப் புதுச்சேரிக்கு வருகை தந்தார்.
டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் காலை புதுச்சேரி வந்த அவர் தனியார் நட்சத்திர விடுதியில் முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரினார்.
குறிப்பாகப் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற உறுப்பினர்களில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் பாஜக தரப்பில் 16 உறுப்பினர்கள் உள்ளனர்.
- பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மூ அரசியலில் சாதித்தது என்ன?
- நரேந்திர மோதி, அமித் ஷா கவனம் செலுத்தும் 'தென்னிந்திய அரசியல்' - முதல் இலக்கு தெலங்கானா
- பாஜகவின் 'இந்துத்துவா' உத்தவ் தாக்கரேவின் இந்துத்துவத்தை ஓரங்கட்டி விட்டதா?
இவர்களுடன் 4 சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் பாஜகவை சேர்ந்த ஒரு மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் 20 சட்டமன்ற உறுப்பினர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரெளபதி முர்மூவை நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
மொத்தமுள்ள 6 சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களில் 4 பேர் தங்கள் ஆதரவு நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ள நிலையில், மீதமிருக்கும் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு யாருக்கு என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை.
மேலும் நியமன உறுப்பினர்களுக்குக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க உரிமை கிடையாது என்பதால் புதுச்சேரியில் உள்ள 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் வாக்களிக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
திரௌபதி முர்மூ குடியர்சுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து நேற்று பேசிய மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, "குடியரசுத் தலைவர் வேட்பாளரை அறிவிக்கும் முன்பாக எதிர்க்கட்சிகளுடன் பாஜக ஆலோசித்து இருந்தால், பொதுநலன் கருதி திரௌபதி முர்மூவுக்கு ஆதரவு அளித்திருப்பேன்," என்று கூறினார்.
மேலும், "இருப்பினும் பாஜகவுக்கு செல்வாக்கு இருப்பதால் திரௌபதி முர்மூவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் எடுக்கும் முடிவை நான் பின்பற்றுவேன்," என்றும் மமதா பானர்ஜி தெரிவித்தார்.
https://www.youtube.com/watch?v=jLMbutjzI-g
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!















Click it and Unblock the Notifications