4 நாளில் 15 ஆயிரம் கோடி காலி..பாகிஸ்தான் பல்லை உடைத்த இந்தியா! இனி வெற்றி ட்ரோன்.. வீர ட்ரோன் தான்!
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் ட்ரோன்களை வைத்தே அதிகம் தாக்கிக் கொண்டன. கடந்த ஏழாம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடந்த தாக்குதலில் இந்தியாவுக்கு 15,000 கோடி ரூபாய் செலவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே வரும் காலங்களில் ட்ரோன்களை வைத்து போர்கள் இருக்கும் என கணிக்கப்படும் நிலையில் இந்தியா அந்தத் துறையிலும் ஆர்வம் காட்டி வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாத முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது.
இந்திய ராணுவம், விமானப்படை, கப்பல் படை இணைந்து நடத்திய ஆபரேஷன் சிந்தூரில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில் இஸ்லாமாபாத், கராச்சி, ராவல்பிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்திய விமான படையும், கப்பற்படையும் இணைந்து தீவிர தாக்குதல் நடத்தியது. குறிப்பாக எட்டாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் பல்வேறு விமான தளங்களும் தாக்கி அழிக்கப்பட்டன. ஆனால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை இந்தியாவின் விமானங்களை தான் தாக்கி விட்டோம் என பாகிஸ்தான் பொய் சொல்லி வந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் பொய்யை வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்தும் வகையில் சீன சாட்டிலைட் நிறுவனமான மிசாஸ் விஷன் துல்லியமான செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இது பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதங்களை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் ஆளில்லா விமானம் எனக் கூறப்படும் ட்ரோன்களில் ஏவுகணைகள் ஆகியவற்றை வைத்து இரு நாடுகளும் மோதின.
ரஷ்யா உக்ரைன் போருக்கு பிறகு தான் ராணுவத்தில் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என்பதை உலகம் உணர்ந்தது. அதனால் 2024 ஆம் ஆண்டு சுமார் 2,500 க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இந்தியா இறக்குமதி செய்தது. இதற்காக 421 மில்லியன் டாலர் செலவாகி இருக்கிறது. ஆர்ச்ச, ஹெரோன் வகை ட்ரோன்களை இஸ்ரேலில் இருந்தும் அமெரிக்காவிலிருந்து எம்க்யூ 9 ட்ரோன்கள், ரஷ்யாவிடம் இருந்து ரஸ்டர் 2, ஆர்ச்சர் என்ஜி ஆகிய ட்ரோன்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
மேலும் தாக்குதல் நடத்திவிட்டு தற்கொலை செய்து கொள்ளும் நாகாஸ்திரா-1 ஆகிய இந்திய ட்ரோன்களும் இந்தியாவிடம் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் எல் 17 வகை பீரங்கிகள். இஸட் 23 எம்எம் பீரங்கி, எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை போரின் போது பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பயன்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் பிற நாடுகளில் இருந்து பெற்ற ட்ரோன்களை பாகிஸ்தான் செலவிட்டது.
இதற்கிடையே கடந்த ஏழாம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடந்த தாக்குதலில் ஒரு நாளைக்கு 1400 முதல் 5000 கோடி ரூபாய் வரை செலவாகி இருப்பதாகவும், தாக்குதல் நடந்த நான்கு நாட்களில் மட்டும் 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகி இருக்கிறது. இதில் பிரமோஸ் ஏவுகணைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் அல்லாமல் 50,000 மதிப்பு கொண்ட ரஷ்யாவின் காமிகேஸ் ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் கண்காணிப்பு மீட்பு நடவடிக்கை, பாதுகாப்பு ஒத்திகை ஆகியவற்றிற்கும் அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானை விட இந்தியா இந்த போரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட நிலையில், வெற்றி இந்தியா வசம் வந்திருக்கிறது. இதனால் வரும் காலங்களில் தொழில்நுட்பத்தை மேம்படுத்திக்கொள்ள இந்தியா அதிக ஆர்வம் காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் நட்பு நாடுகளில் இருந்தும் அதிக அளவில் ட்ரோன்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ட்ரோன் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு சார்ந்த நிறுவன பங்குகள் சிறப்பான ஏற்றத்தை கண்டுள்ளன. கடந்த மே 7-ஆம் தேதிக்கு பிறகு, IdeaForge Technology, Paras Defence, Zen Technologies, Hindustan Aeronautics (HAL), Bharat Electronics (BEL) மற்றும் DCM Shriram Industries போன்ற முன்னணி நிறுவன பங்குகள் 8% முதல் 50% வரை உயர்ந்துள்ளன. இந்த உயர்வுக்கு முக்கிய காரணம், ட்ரோன், எலக்ட்ரானிக் போர்கலம் மற்றும் மல்டி-லேயர் விமானப்படை பாதுகாப்பு போன்ற துறைகளில் அரசு அதிக முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுவதே ஆகும். மேலும், உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் சமீப காலங்களில் மிகத் துல்லியமாக செயல்பட்டுள்ளன என்பதற்கும், உலக அளவில் இதற்கு பாராட்டுக்கள் கிடைத்ததால் இந்நிறுவனங்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அதிக நம்பிக்கை காட்டி வருகின்றனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications