ஓவர் போதை... நடுரோட்டில் படுத்துத் தூங்கிய போலீஸ்காரர்.. பேருந்து ஏறியதால் பலி!
போதையில் சாலையில் படுத்திருந்த போலீஸ்காரர் விபத்தில் பலியானார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

போதையில் நடுரோட்டில் தூங்கிய போலீஸ்... பேருந்து ஏறியதால் உயிரிழப்பு
அகமதாபாத்: மதுபோதையில் சாலையில் படுத்திருந்த போலீஸ்காரர் மீது பேருந்து ஏறியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அகமதாபாத்தின் நரோடா பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் பார்மர் (45). போலீஸ்காரரான இவர் தீபாவளிக்கு முந்தைய தினம் இரவு மது குடித்துள்ளார். அதிக போதையால் சாலையிலேயே படுத்து தூங்கி விட்டார்.

தீபாவளியன்று அதிகாலை சுமார் ஒரு மணியளவில் அவ்வழியே வந்த பேருந்து எதிர்பாராத விதமாக அவர் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பேருந்து ஓட்டுனரைக் கைது செய்தனர். 'இருளில் தினேஷ் சாலையில் படுத்திருந்தது தெரியவில்லை' என விபத்திற்கான காரணம் குறித்து ஓட்டுநர் போலீசில் தெரிவித்துள்ளார்.
தீபாவளியன்று நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications